பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலி 23 &

என்ன வேண்டிக் கிடக்கு?' பெரியவர் பொறுமினார். 3 நான் ஒண்ணு கேட்க நீ ஒண்னு சொல்லி ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்காமே இப்படியே அறுபது வருஷம்.”

அப்படித்தானிருக்கட்டுமே! ஊஞ்சலைச் சித்தே நிறுத்தறேளா, நீங்கள் சொன்னபடி இந்த அறுபது வருஷத் துக்கு உங்களுக்கு ஒரு தனி நமஸ்காரம்."

நமஸ்காரம் பண்ணி என்னை மன்னிக்கறையாக்கும்!”

சரி, நானே மன்னிப்புக் கேக்கறதாயிருக்கட்டுமே!’

ஏதேது! இத்தனை பவ்யம்?’’

உண்மையில் சொல்லப்போனால், இந்த வயசிலே நமக்குள்ளே மன்னிப்புக் கேக்கறதிலும், மன்னிக்கறதிலும் அர்த்தமிருக்கோ?’’

அப்போ இந்த நமஸ்காரத்திலும் அர்த்தமில்லை.” எல்லாமே அர்த்தம் புரிஞ்சா செய்யறோம்? புரிஞ்சு தான் என்ன ஆகணும்? பெரியவா இதை இதை இப்படி செய்னு சொல்லிட்டுப் போயிருக்கா; செஞ்சுட்டுப் போறோம். எனக்கு அது போதும்.’’

ஏதேது, நேத்திலிருந்து ஞானப்பல் முளைச்சிருக்கு." பல்லுக்கு இனி எங்கே போவேன்? வாய் பர்ஸாகிப் பத்து வருஷமாச்சு’’

சரி, மூணாம் கண் .'" நெற்றிக்கண் உங்களுக்குத்தான்-கொஞ்சம் காப்பி சாப்பிடறேளா?*

இதோ பார் அமலி, இந்த மூனுநாள் அடிச்ச கூத்துப் போதும். எனக்கு, ஒரு மிளகு ரஸம் எதேஷ்டம். நீயா இழுத்துவிட்டுக்காதே-'