பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 லா. ச. ராமாமிருதம்

மூணு பவுன்தான் அமலி. அப்போ பவுன் பதிமூனு: ரூபாதான் அமலி "'
இப்போ உங்க அப்பாவுக்கு வக்காலத்துப் பேச றேளா? பவுன் ரூபா பதிமூணுதான். ஆனால் காசுக்குப் பஞ்சமாச்சே! அதுக்காக, சாந்தி நடக்காமலே என்னை விட்டுக்கு அனுப்பிச்சுட்டது நியாயமாமோ?’’

அவளுக்கு மூச்சு தேம்பிற்று. அவர் தலைகுனிந்து நின்றார். அவளுக்குப் பரிவு தாங்கவில்லை. அருகில் வந்து நின்றாள். தொடனும் போலிருந்தது. ஆனால் வெட்கம். ஒருவரையொருவர் தொட்டே எத்தனையோ நாளாச்சு. அவர் முகத்தடியிலிருந்து: என்மேல் உனக்குக் கோடமா யிருந்திருக்கும்.’’

அவள் சற்று யோசித்துவிட்டு, அப்படித் தனியாத் தெரியல்லே. நாம் என்ன செய்ய முடியும்? பெரியவா மனசு வெச்சாத்தானே உண்டு! அந்த மூணு வருஷமும், அதுவும் கடைசி ரெண்டு, நெருப்பை மிதிச்சுண்டுதானேயிருந்தேன். வாழாவெட்டி வெளியில் தலை காட்ட முடியுமா? இத்தனைக்கும் அடுத்த தெருவுக்கு அடுத்த தெருதான் நாம். தற்செயலாகத் தெருவில் பாதை குறுக்கிட்டதுகூடக் கிடையாது. ஆனால் ஒருநாள் நான் உங்களைப் பார்த் தேன். நீங்கள் பார்க்கல்லே.”

நெல்லுப் பரணுக்குப் போகும் மரப் படிக்கட்டில் ஒரு படியில் அவர் உட்கார்ந்துகொண்டார்.

அன்னிக்குச் சோமவாரம். அம்மாவோடு கோவி லுக்குப் போயிருந்தேன். நீங்கள் திருக்குளத்தில் குளிச் சுட்டுப் படிக்கட்டு ஏறிவரேள், கையில் கமண்டலத்துடன், ரிஷிகுமாரன் மாதிரி. உடம்பில் ஜலம் முத்துத துளிச்சுண்டு: ஏற்கெனவே நல்ல சிவப்பா, அப்படியே தகதகத்துண்டுஅப்பா, உடம்பு சிலுக்கறது. கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அங்கிருந்து இந்த மஹா புருஷனை அடைவேனான்னு நெனச்சுண்டேன்."