பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலி 2岛急

மெளனம்.

சற்றுநேரம் கழித்து: அமலி, தூங்கிட்டையா?” e இல்லே, என்ன வேனும்?"

"எனக்கு மனசு சரியில்லே. இல்லை, நீ எழுந்திருக்க வேண்டாம். விளக்கைப் போட வேண்டாம்.'

திரும்பத் திரும்ப நம்ம பசங்கதானே! ஏன் வீண் கவலைப்படறேள்:”

- தாஸ் நிலத்தை விற்கக் கெடுபிடி பண்ணுவான் போலத் தோணறது. நான் சம்மதிக்காமப்போனால். தன் பங்கைக் கேட்பான்போல இருக்கு."

சரி, கொடுத்துடுங்கோ."

ஒருத்தன் கேட்டால் மத்தவன்களும் கேட்க வேண் டியதுதானே? பெண்களுக்கும் இப்போ பங்குண்டு.”

. சரி, பிரிச்சுக் கொடுத்துடுங்கோ.”

ஜடம், ஜடம்! அப்புறம் நம் பங்கு என்ன இருக்கும்? நாக்கை வழிச்சுக்க வேண்டியதுதான்.'

. இதோ பாருங்கோ நீங்கள் நினைக்கறமாதிரி குழந்தைகள் அத்தனை கெட்டவா இல்லே. நாமும் அவாளை நம்பனும், கவளம் தொண்டையில் சிக்கினால் சாவுன்னா சாப்பிடவே முடியாது. அப்படி நம்மை த்ராட்டில் விட்டுடமாட்டான்கள்."

அதுசரி, அங்கே மூணு மாசம். இங்கே மூணு மாசம். அடுத்து மூணு மாசம்னு பெத்தவாளை ஏலம் விட்டால் உனக்கு வேண்டியிருக்கும்போல இருக்கு: என்ன சிரிக்கறே?" கோபம் வந்துவிட்டது. - - .