பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லா, ச. ராமாமிருதம்

குரலோசை முன்னே, நரேஷ் பின்னே. பின் வீட்டி லிருந்து கிணற்றடி வழியாக எப்பவும்போல் அவன் வழி. பாவம் அவன் என்ன செய்வான், அந்தக் குரல் எப்பவுமே இரண்டு டெலிபல் தூக்குத் தான். * உனக்கு யார் சொன்னது?’’

பார் சொல்லனும். நான் உங்களுக்குப் பின் வீட்டுக் காரன் மாமா. மாமா, ஒண்னு சொல்றேன். பாம்பைப் பார்த்தேன்னவன் பொய் சொல்லியிருக்கான். உங்கள் சுபாவம் தெரிஞ்சு.”

நரேஷ் நீ கெட்டிக்காரனாயிரு. வேண்டாம் என்க

தான் யார்? ஆனால் மத்தவாள்ளாம் மக்குன்னு பன்னாதே; ”

அப்படின்னாப் பார்த்தவாளுக்குக் காலம் சரியில் லேன்னு அர்த்தம், அப்படியெல்லாம் லேசா, காரண மில்லாமல், யார் கண்ணிலும் பாம்பு பட்டுடாது மாமா. பாம்பு, பசு ரெண்டும் மனுஷாள் மாதிரியில்லே. அதுக ளோட பூர்வாம்சமே வேறே

இந்த ரீதியில் என்னத்தையோ கொட்டிவிட்டுப் போய் விட்டான்,

அவருக்குச் சிரிப்பு வந்தது, கோபம் வந்தது, ஆச்சரியம் வந்தது:

இவனுக்கு ஏன் இத்தனைப் பதட்டம், அவர்கள் வீட்டில் வாழும் பாம்பைச் சொல்கிறார்கள் என்று ரோசமோ?

வாசலில் வந்து உட்கார்ந்துட்டேளா? இன்னும் அந்த நேரம் ஆகல்வியே t' இவன் எ ப்போ முளைத்தான், வந்ததே தெரியல்லியே! ஆனால் சேதுவே அப்படித்தான். சத்தமில்லாத பாவனை, சாந்தமும், மரியாதையும் பிசகாத குரல். ஆனால் அப்பா அவனுக்காக வாசலில் உட்கார்ந்

திருப்பது அவனுக்குப் பிடிக்காது.