பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 லா. ச. ராமாமிருதம்

  • நீங்க சொல்றதுக்குச் சிரிப்பு வந்தது. சரி, நீங்கள் சொல்றபடியே வெச்சுப்போம். நாமும் எட்பத்தான். ஊர் ஊராப் போயிருக்கோம்? இப்படியும் ஒரு மாறுதல்னா இருக்கட்டுமே!’

தலையிலடித்துக் கொண்டார். 'நீ மாறவே மாட்டாய். நீ காமாலைக் கண்ணிதானே!' திடீரென ஓர் எண்ணம் உதித்தவராய்: "அமலி ஏன், இப்படியும் தோணறது. நான் அப்பாவை மூணு மாசம், நீ அம்மாவை ஆறு மாசம், இந்த மாதிரியும் பங்கு போட்டுக் கொள்ளலாமில்லியா?*

அவளுக்கு ஒரு மூச்சு தவறுவது இருட்டில் கேட்டது.

என்ன்ைனா சொல்றேள்? நம்மைப் பிரிச்சுடுவாளா?" திடீரென்று குரல் தீனமாகிவிட்டது.

ஏன் நடக்கக்கூடாது? எல்லா சாத்தியக்கூறையும் யோசிக்க வேண்டியதுதானே, ஒரே சமயத்தில் இரண்டு பேர்னா அதுவும் பளுதானே? காலமும் அப்படித்தானே இருக்கு சரி விடு-யோசனை பண்ணிப் பண்ணி மண்டை யைக் குடையறது. நீ சொல்ற மாதிரி எல்லாம் முடிஞ்ச வரைக்கும்தான். அப்புறம் அவள் விட்ட வழி. ’’

கால் துக்கம் அரைத் துர்க்க மயக்கத்தில் யாரோ தன் கையைப் பிடித்தமாதிரி-அவள்தான். அவர் விடுவித்துக் கொள்ளவில்லை. அந்த மெளனச் சைகை வேண்டியிருந்தது.

கூடவே ஒரு வண்டின் கூவல் எங்கிருந்தோ கிளம்பிற்று. இருட்டில் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. ஒரு தடவை முகத் திலும் மோதிற்று. கொட்டினால் அவ்வளவுதான். அவள் கமேல் அவர் பிடி கொஞ்சம் இறுகிற்று. எங்கோ இருட்டில் ழி தப்பி வந்திருக்கிறது. அரைக்கணம் பயத்தில் செயலிழந் ார். அப்பவே அவர் பிடியிலிருந்து அவள் கை நழுவித் வண்டு விழுந்தது.