பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多盛莎 லா ச. ராமாமிருதம்

என்மேல் ஏதோ மெத்தென்று வீசி ஒற்றி விழுந்து எழுகிறது. ஓ, நீ என்னை நட்பு பிடிக்கிறாயா? நீதானே காற்று?

ஆம், நீ இப்பத்தான் தூக்கம் கலைந்திருக்கிறாய், இல்லையா? என்னைச் சோதரனாக்கொள். ஆம், உறவு எங்கேனும், யாரேனும் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா? சோதரனே, உன்னைச் சுற்றிலும் விழித்துப் பார்’

மையிருள் என்மேல் கவிகின்றது. இப்போது மேகங்கள் வலுவிழந்து கலைகின்றன. தேய்ந்த நிலவின் இருண்ட வெளிச்சத்தில் என் விளிம்புகள் தெரிகின்றன.

என் அடிவாரத்தில் பொட்டுகள் சொட்டினாற்போல் வீடுகள் கட்டான் கட்டானாய் வயல்கள். எதிருக்கெதிர் வீடுகள். நடுவே பாம்பு வளையில் ஒடும் பாதைகள், மனிதன் ஏன் ஒடியாடி அலைகிறானோ, இப்போது வீட்டுள் களைத்துத் தூங்குகிறான். அதுவும் என்ன நிச்சயம்? ஆனால் நான் காவல். நானும் பயப்படுகிறேன் என்று நினைத்துக்கொள்வதில் ஒரு பெருமிதம் உணர்கிறேன்: எனக்கு இனி உறக்கம் என்பதில்லை. இப்பத்தானே விழித் திருக்கிறேன்!

நேரம் முதிர முதிர, வானம் சாம்பல் பூத்துப் படர்ந்து, திட்டு வலுத்து வெண் சிவப்பாகி அடுத்து அத்துடன் மஞ்சள் குழைந்து, செஞ்சிவப்புச் சாயம் தோய்ந்து-என்னுள் ஏதோ பரபரப்பு-ஏதோ கம்பீரம் உருவாகிக் கொண்டிருக் கிறது. இது எனக்கொரு விழிப்பு. விழிப்புள் விழிப்பு.

தங்கத் தாம்பாளம் தகதகத்துக்கொண்டு எழுகிறது. அதனுள் விடும் ஒளி மனிதனா, தேவனா? பார்வையைப் பறிக்கும் அந்த ப்ரகாசத்தின் கூச்சம், அந்த ஊருக்குத் தெரியவில்லை. தெரியலாகாதென்றேதான் இந்த ஒளியோ? பலவர்ண மேகத்திரள்கள் பரிவாரம் சூழ்ந்திருக்கின்றன. நான் என்னவோ இருக்குமிடத்தில்தான் இருக்கிறேன். ஆனால் நானும் இந்தப் பரிவாரத்தில் சேர்த்தி தான். எப்படி