பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சி வெய்யில் 24 &

யென்றுதான் விளங்கவில்லை. இத்தனை மேகங்கள் எப் போது திரண்டன? நாளாவட்டத்தில் தெரிந்துகொண் டேன். முதன்முதலாக நினைவு தே ன்றிய நாள் முதலாய் இப்படித்தான் நேர்ந்துகொண்டிருக்கிறது. திடீரென்று பாறை பாறை, மதில் மதில், உடனேயே அத்தனையையும் விரட்டி அடித்துவிட்டு, பூரித்த முழு நீலத்தின் நடுவே புரி யாத கோலத்தில் ஜ்வலித்துக்கொண்டிருக்கும் அந்த ஜோதி

இவருடைய ரலமி படாத இடமே இல்லை. என்மேல் என்னைச் சூழ்ந்து செழித்த பசுமையில், என்னைப் போலவே ஆங்காங்கே நிற்கும் இக்குன்றுகள் மேல், விட்டு விட்டு நட்ட தந்திக் கம்பங்களில், கம்பிகள் ஜ்வ விக்கின்றன. தந்திகள் வாசிக்கின்றன. இருந்த இடத்தில் இருந்தபடி, இந்தப் பெரிய ஆசீர்வாதத்தில் அதிசயிக்கத்தான் முடியும், அதிசயிக்கிறேன்.

அதிசயம் விழிப்பின் விரிவு,

அதோ மலைமீது கோவில் ஸ்தூபியைத் தகதகப்புத் தொட்டு, ஸ்தூபி நெருப்புப் பந்தாய் மாறுகிறது, மலை அடிவாரத்தில் ஏரியில் நீர்மட்டம் வெள்ளித் தகடாய் மாறி விட்டது:

ஆள் நடமாட்டம் ஆரம்பித்து, உடனேயே அதிகரித்தும் விட்டது. மனிதன் மறுபடி ஒடியாடி அலைய ஆரம்பித்து விட்டான். படிப்படியாக உயர்ந்து உச்சியை அடைந்ததும் வெயிலின் வெம்மையில், நான் காணும் உலகம் திரைச்சீலை யாக நடுங்குகிறது. இந்தச் சமயத்துக்கு இவருக்கு ஏன் இத்தனை கோபம்?

ஆனால் உச்சியிலிருந்து இறங்கத் தொடங்கியதும், இந்தக் கோபம் தணியத் தொடங்குகிறது. அவரும் படிப் படியாக இறங்குகிறார். எதிர்வானம் தண்ணிய சிவப்பில்,

பி,-16