பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 லா. ச. ராமாமிருதம்

மேகங்கள், பலவர்ணத் தீட்டலில், பாறைகள் குடிசைகள், தீசல்கள் ஈட்டுகின்றன. அவருடைய அற்புதமான ஜ்வலிப்பை இப்போது கண்ணைக் கூசாமல் தரிசிக்க முடிகிறது.

என்றோ ஒருநாள். இந்தக் காலத்தின் அளவு என் கணக்கிலுமில்லே மனிதன் கணக்கிலுமில்லை. என்றோ ஒரு நாள் நானே இந்த நெருப்பின் பொங்கலில் சிதறித் தெறித்த செந்தணல் பொறியாகப் பூமியில் விழுந்து நீர்த்து இறுகிப் போய். நாளடைவில் மண்ணும் புழுதியும் சேர்ந்து கெட்டிப் பட்டுப்போன உருவமோ என்று திகைக்கையில் என் கல்லும் குறுகுறுக்கிறது.

ஒளிமங்கி, இருள்கூடி, இரவு மீண்டும் வந்துவிட்டது. இப்படி மாறி மாறி பகல் இரவைத் துரத்தி, இரவு பகலைத் துரத்தி இந்த ராட்டினம் இதுவரை எத்தனை, இனிமேலும் எத்தனையோ?

இதுபோன்ற ஒரு பகலில் கிழவனார் ஊருக்குப் போய் விட்டார். அவரை வண்டி ஏற்றி அனுப்பிவிட்டு, பையன் திரும்பி வந்து வாசற்படியில், முழங்கால்களைக் கட்டிய கை களினிடையே முகம் கவிழ்ந்து உட்கார்ந்துவிட்டான். அவன் தோள்கள் குலுங்கின. இவன் துக்கத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும்?

மறுபடியும் அவன் இஷ்டப்படிதான் வருகிறான். போகிறான். அவனால் முடிந்ததும் அதுதான். மனிதர்களின் கவலைகள், துயரங்கள். அவரவரது தனித்தனி.

என்னைச் சூழ்ந்த மற்ற குன்றுகளைக் காட்டிலும் நானே பெரியவனாயிருக்கிறேன். உயரமில்லை, பரவல். என் தடுவே ஒரு சுனை தண்ணீர் மெதுவாய்க் கொப்புளித்த வண்ணமாயிருக்கிறது. பூமியின்கீழ் என் வேரும் அதன் சுரப்பும் எத்தனை ஆழமோ? தண்ணின் வி றுவிறுப்பை உணர்கிறேன். ஆனால் இதைத் தேடி வருவோர் அதிக மில்லை. சுற்றி கிணறுகளும் பம்பு செட்டுக்களும் ஏராளம், எட்டு தூரத்தில் ஏரி,