பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

嫩

அ வ ள

கமலாம்பிகே ஜம்பு குருக்கள் துண்டை உதறிப் போட்டுத் திண்ணைமேல் உட்கார்ந்தார்.

பெயரைச் சொல்லிச் சொல்லி, அது மூச்சோடேயே’ கலந்துபோய், மூச்சும் நாமமும் வேறென்று நினைக்கவே மறந்துபோச்சு.

அம்மன் சன்னதிக்கு வெளியே சுவரை ஒட்டி ஒரு திண்ணை, அதில்தான் அவர் ஒழிந்த நேரங்களில் உட்காரு. வதும், சமயங்களில் இரவு படுப்பதும் வழக்கம். இன்று (பெளர்ணமி மட்டும்) நடு நிசியில், கர்ப்பக்ருஹத்தில் ஒரு சந்துவழி, சந்திரன் அம்மன் முகத்தை வியாபிக்கும்போது அவள் கண்கள் விழித்தெழுவதுபோல மாயங்காட்டுவதற்குக் காத்திருப்பார். அவருக்கு அது கண்கொளாக் காrதி. -

கமலாயதாகஜி. ஏனோ தெரியவில்லை. மனது அலசிப் பிழிந்து உலாத்தி னாப்போல், துல்லியமாய், லேசாய், குளுமை வழிந்து நிறைந்திருந்தது.

கைகளைக் கோர்த்து, தலைக்கு வைத்து மல்லாந்து: படுத்தார். கண்ணுக்கு நேரே கூரையில் கல் தாமரை? இதிவான மோனம் சூழ்ந்தது.