பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 லா. ச. ராமாமிருதம்

6*gá森)fr。""

சரி, வா கமலா, இந்த மணைமேல் உட்கார். வெள்ளிக் கிழமை ஒரு கை எண்ணெய் தலையில் வைக்கறேன், சற்றுப் பொறு, சமையலாயிடும்.'

ஆமாம், எத்தனை நாள் வேனுமானாலும் பட்டினி கிடப்பேன். பசிக்கணும்னு நெனச்சேன்னா தாங்கவே முடி யாது. என் பசி ஒருத்தி பசி மட்டுமல்ல. எத்தனையோ பசிகள், ’’

என்ன உளறுகிறாள்; வெண்கலப் பானை காலி. இன்னுமா பசி: அதென்ன பசி? ஆச்சரியம், கூடவே பயம்.

கூந்தலின் அடர்த்திக்கும் நீளத்துக்கும் எண்ணெய் பற்றவில்லை. எண்ணெய்க் காப்பில் கருங்காவி சிற்பம் போலப் பளபளத்தாள்.

சுவரில் மாட்டியிருந்த படத்தெதிரே-அவள் நின்றாள்.

அகிலாவின் பட்டுப் புடவையில், கோடாலி முடிச்சிட்டுக் காடாய்ப் படர்ந்த கூந்தல், நெற்றியில் குழைத்துப் பட்டையாயிட்ட விபூதி (அவள் வீட்டுப் பழக்கமாம்) நடுவில் குங்கும். அசைவற்ற சுடராய்த் தியானத் தில் நின்றாள்.

குத்துவிளக்குச் சுடர் அவளைக் கண்டு அஞ்சினாற் போல் பின்வாங்கி, முதுகு நெளிந்து ஆதரவு கண்டாற் போல நிமிர்ந்து பிதுங்கிற்று. உதடுகள் செதுக்கவில் அசலன மாய், மோவாய் நடுவே குழிவு. அகிலா அதிசயித்து நின்றாள். அறியாமல் கைகள் கூப்பிக்கொண்டன. பார்க்கப் பார்க்க இவளிடம் ஏதேதோ புதுப்புது அழகுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியே கல்லாகிவிட்டாளா? பயம் வந்துவிட்டது. கமலா கமலா!! அவள் தோளைத் தொட்டு அசைத்தாள்.

விழிகள், மெல்லத் திறந்து, அவளை அணைத்தன.