பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் 261

அகிலாவுக்கு நெஞ்சு விம்மிற்று. என்ன அம்மா-?" அவ:கு அவளை அணைத்துக்கொண்டாள். அகிலா பொட். டென உடைந்துபோனாள். விக்கி விக்கி அழுதாள். இத்தனை நாள். தனக்குத்தானே ஒப்புக்கொள்ளாமல், தன்னுள் சிறை கிடந்த தாய்மையின் தவிப்போ? குருக்கள் இல்லை. கோவிலுக்குப் போயிருந்தார்.

அவர் கோவிலிலிருந்து திரும்பியபோது, அவர் முகம் ஒரு தினு:சாக மஞ்சள் பூத்து வெளிறிட்டிருந்தது.

என்ன ஆச்சு?'-அகிலா பதறிப் போனாள்.

அவர் உதடுகள் நடுங்கின. வாய், ஏதோ சொல்ல முயலும் முயற்சியில் தோற்றன.

அவர் கண்கள் அவளை நாடின. அகிலாவின் கேள்விக்குப் பதில் அங்கேதான்.கமலா பொட்டெனச் சிரித்தாள். அவள் விழிகள் கூத்தாடின.

ஒண்னுமில்லேம்மா, அப்பா அனாவசியமா மிரண்டு போயிருக்கார், காரணம் இங்கிருக்க, எங்கேயோ தேடினால்? சரி சரி, ரொம்பப் பசிக்கிறது. அப்பா, சோத்து மூட்டையை அவிழுங்களேன். அம்மா, எனக்கு ஊட்டிவிடறியா?’சிரித்தாள். பருப்புஞ் சாதத்துலே நெய்யும் சர்க்கரையும் இது போதாது, நிறையப் பிசை எல்லாருக்கும்

ஒரே பாத்திரத்தில்." பற்களில் நகடித்ரங்கள் மின்னின. அகிலா கண்ணைக் கசக்கிக்கொண்டாள், ஒண்னுமில்லியே!

அவள் வாயில் கவளத்தைப் போட்டதும் அகிலா ஒரு அசாத்ய பரவசத்தில் ஆழ்ந்தாள். திடீரெனச் சுரப்பில் தன் ரவிக்கை நனைந்ததை உணர்ந்தாள். அவளுக்கு அது ஆச்சர்யமில்லை. ஊட்டக் கேட்டது ஆச்சர்யம் இல்லை. எதுவுமே ஆச்சர்யமில்லை. ஒரே அன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போனாள்.