பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 லா. ச. ராமாமிருதம்

இப்ப நான் உங்களுக்கு ஊட்டறேன் : அ...ஆ... அப்பா, வாயைத் திறவுங்கோ.'

ஆ.மதுரமே! ஒரே கலம், எச்சில், தீண்டல், ஆசாரம், பூஜை, புனஸ்காரம் என்ன வேண்டிக்கிடக்கு? எல்லாமே ஒரே அன்பு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயின,

முதன் முத்தத்தின் எச்சிலில் ஆரம்பித்து உயிர் முத்து வைத்த வித்திலிருந்து கடைசியில் கடைவாயில் வழியும் எச்சில்வரை தலைமுறை தலைமுறை எச்சில் இல்லாவிடில் இப்புவனமே ஏது? வந்தவள் சொன்னாளா? நெஞ்சில் தானே தோன் றியதா? ஒரே ஆனந்த மூர்ச்சையில் எந்நேரம் மூழ்கி யிருந்தனரோ?

தோட்டத்தில் கிணற்றடியில் பலா மரத்தில், கூட்டில், இரையைத் தாங்கிவரும் தாயைக் கண்டு குஞ்சுகள் ஆர்ப் பரிக்கின்றன.

தூரக் காட்டில் தேன் குருவி பகு சொகுசில் பூவுக்குப் பூ அந்தரத்தில் நின்று தேனை உறிஞ்சுகிறது.

மேகங்களற்ற நிர்ச்சலமான நீலத்தில் வெள்ளித் தாம்பாளம் கண் க்ச தகதகக்கிறது. இல்லை, இது அவள் அபய சுரத்தில் ஜ்வலிக்கும் மோதிரத்தின் முகப்பு.

நண்பகல் சொக்கல். நேரம் முதிர முதிர, அவள் வதங்கலுற்றாள். வேர் கழன்ற இலைபோல் கொஞ்சங் கொஞ்சமாய்த் துவண்டு... என்ன குழந்தை ஒருமாதிரி ஆயிட்டே, உடம்பு சரி வில்லையா?’ ’

அவர் நினைப்பு வந்துவிட்டதம்மா." என்ன அதுக்குள்ளேயுமா? சாயந்தரம்தான் போப் போவதாச் சொல்லிண்டிருக்கே! வெள்ளிக்கிழமையு மதுவுமா. ”