பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி X 31

கூட இல்லாமல் உட்கார்ந்து கண்ணைக் கசக்கியபடி அழுது கொண்டிருக்கும். இல்லே எச்சிலைத் துப்பி விளையாடிக் கொண்டிருக்கும் அதுதான். x அதுக்குத் தனியா உசிர் உண்டா, சுரணை உண்டா, எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உண்டு.”

பேஷ், பேஷ் அப்படியே என் அச்சுத்தான். ஆனால் கண் மட்டும் சற்றே குழிவு. இவன் வயசில் அப்படியே நான் இவனேதான். ஆனால் மீசையில்லை. பயம், அம்மா முழியை நோண்டிவிடமாட்டாளா? எனக்கும் மீசைமேல் ஆசை கிடையாது. இவன் அனுமதி கேட்டானா? நான் அப்படி எதிர்பார்க்கிறவன் இல்லை. எனக்கு அதில் அக் கரையுமில்லை. ஆனால் மீசை இவனுக்கு நன்றாயிருக்கிறது.

அவன்மேல் அவர் கண்கள் கனிந்தன. கண்முன் இரு துரங்கள் பாய்ந்தன. அவைகளினுள்டே சேது காத தூரத் தில் தெரிந்து, மங்கிக்கொண்டே வந்தான். ஆனால் குரல்

Di Già sttlig-ship. What is the matter with him?

நாங்கள் எந்த நிமிஷமும் ரிஸ்கிலேதான் வளைய வரோம். வாழறோம். கையிலெடுத்த கவளம் வாய் போய்ச் சேருவது நிச்சயமில்லை. அதனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? வீட்டுள்ளே பாம்பு, வெளியில் விபத்து என்று வெளியில் போகாமல் இருக்க முடியுமா? உங்கள் கவலையில் எங்கள் இறக்கைகளைக் கட்டிப்போட்டு உங்களைச் சுற்றி உட்கார்த் தி வைத்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பிழைப்பு எப்படி? அவரவர் வாழ்க்கை எப்படி? காரணி தான் வாழ்க்கை அதுவே தான் adventure என்னப்பா முழிக்கறேள்: லெக்சர் பண்றேனா? என்னப்பா அப்படியே பார்க்கறேள், அப்பா-அப்பா!'

கவிழ்ந்தாற்போல் அவன் மேல் சாய்ந்துவிட்டார்.

xசுழலும் வேகத்தில் சக்கரத்தின் தோற்றத்தைப் பெற்று ஜகஜ்ஜோதியாக அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. இவன் என்ன புதுசா சொல்லிட்டான்? சக்கரம் அறுக்கறது கபாலம்