பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன்

அப்படி வந்து நேரும் என்று அவள் எதிர்பார்க்க சந்தர்ப்பம் அப்படி வாய்த்தது: இருட்டு, மழை, என்றாலே, அவளுக்குப் பயம், தாழ்வாரத்தில் விளக் ாவிட்டால், தலை போனாலும் அவ்வழி போக

காட்டான் :

ஐப்பசி காசம் அடை மழை" என்பார்களே, அன்றைய மழைக்கு, இது நன்றாய்ப் பொருந்தும், அப்படித் தாரை தாரையாய் வானம் உடைப்பெடுத்தாற்போல், ஊற்றியது. பகல் பத்து மணியான போதிலும், அவள் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி மேஜையின்மீது வைத்துவிட்டாள். ஆனால் அவ்வொளியில் அவள் எதிர்பார்த்த தென்பு அவளுக்குக் கிட்டவில்லை.

சுவர் ஒரமாய், ஒரு பிரம்பு நாற்காலியில், பூனைபோல், கால்களை மடித்துப் போட்டுக்கொண்டு, மழைக்குப் பயந்து, அவள் பதுங்கிக்கொண்டிருந்தாள். அங்கே இருந்தும் இல்லாதவனாகவே நிற்கும் தன் கணவனை, அவளது கண்கள் சஞ்சலத்துடன் நோக்கின.

என்ன காத்திரம் கால்களைச் சற்று விரித்து அழுத்த மாய் ஊன்றிக்கொண்டு, பின்புறம் கைகளைக் கட்டிய வண்ணம், சிலையடித்தாற்போல் அவன் நின்றான். அவனது கண்கள் கூட அதிகம் இமைக்கவில்லை; ஜன்னல் கண்ணாடி