பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன் 2莎

மேல் வழியும் மழை ஜலத்தையும், அதற்குப் பின்னால் எதிரில் ஓங்கி நிற்கும் குன்றுகளிடையில் இன்னமும் திரளும் மேகங்கள் கவிந்து குவிந்து ஒன்றுடனொன்று குழைவதை யும், பார்த்துக்கொண்டிருந்தான். இம்மழைத் திரையின் பின்னால் பதுங்கும். ஏதோ ஒன்றை, அவன் பார்வை தேடி யலைந்தது. அவன் அங்கே இருந்தும் இல்லை.

சொடேர்;-’

சாட்டையடி போன்றதொரு மின்னல் வீசியது; அதைத் துரத்திக்கொண்டே உருண்டு சென்ற ஓர் பேரிடி மொள மொள'வென நொறுங்கியது.

வீல்" என்று ஒரு அலறு அலறி, ஒரு துள்ளுத் துள்ளி, தன் கணவன்மேல் அவள் துடித்து விழுந்தாள்.

எங்கேயோ, ஒரு கண்ணாடி உடைந்த சத்தம்...

அவன் கைகள், அவளைக் கீழே விழவொட்டாமல் தாங்கின. அவன் கண்கள், அவளது பயத்தைக் கண்டு புன்னகை பூத்தன. அவ்வளவுதான்

கலியாணமானது முதல் இதுதான் அவளுடைய முதல் ஸ்பர்சம். இதுவரையில் உள்ளேயே குமுறிக்கொண்டிருந்த அவளது ஆசை வெள்ளம், திடீரென்று பொங்கிப் பெருக் கெடுத்துவிட்டது. அவள் தன்னை மறந்தாள். வெறி பிடித்தவள்போல், அவனை இறுக அனைத்தாள்.

அவன் கண்களில் புன்னகை மலர்ந்தது

கத்ரீச்-1”

அவன் போட்ட கத்தல் ஆகாசத்தைக் கிழித்தது. திடீரென்று, அவன் தலை ஆடியது, யாரோ கன்னத்தில் அறைந்தாற்போல மறுகணம், அவன் வாயோரத்தினின்றும் ஒரு இரத்த நூல் அரும்பி வழிவதை அவள் கண்டாள். கீழே விழவிருந்தவன், சமாளித்துக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தான்.