பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன் 27

மாய், என் சொந்தப் பெயரைக் கூவி, தேவராஜா” என்று கூப்பிட்டால், சுருக்கப் புரியாது. அம்மா, ஆசையாய் மொத்துக் குட்டீ என்றுதான் அழைப்பாள் :

' உடம்பு கொழு கொழுவென்று இருப்பேன். அவ்வளவு தான். மற்றபடி, மூளை மஹா மந்தம். சூrம சக்தி சூன்யம். ஏழு, எட்டு வயதான பிறகுகூட, இந்தச் சாமி வைத்து வளையாடுதல்", புருஷன் பெண்டாட்டி விளை யாட்டு இம்மாதிரியான சில்லறை விளையாட்டுக்கள்தான் தெரியும்.

பழையதைப் போட்டுப் பள்ளிக்கூடம் போகச் சொன் னால், ஸ்லேட்டையும் புஸ்தகத்தையும் எடுத்துக்கொண்டு எங்கள் ஊருக்கருகில் ஒரு மாந்தோப்பு உண்டு-அதில் ஒரு மரத்தின் கிளையில் தொங்க விட்டுவிட்டு, நான் பாட்டுக்கு ஒரு கல்லையோ ஒடிந்த கிளையையோ வைத்துக்கொண்டு, என்னத்தையோ உளறிக்கொண்டு, அந்தத் தோப்பி விருக்கும் கண்ணம்மாள் கோவிலில் விளையாடிக்கொண் டிருப்பேன்."

கண்ணம்மா கோவில், தெருக்கோடியில் காணும் பிள்ளையார் கோவில்மாதிரி, சின்னதாய்த் தான் இருக்கும். கண்ணம்மா எங்கள் ஊர்க் கிராமதேவதை. கிரமமான பூஜை கிடையாது. ஒரு நாளில் ஏதாவது ஒருவேளைவாரத்துக்கு இரண்டு முறை இருக்கும்-பூசாரி வந்து: விக்ரஹத்தின் தலையில் ஒரு சொம்பு தண்ணிரைக் கொட்டி விட்டு, நைவேத்யம் கூட வைக்காமல் போய்விடுவான், வழிப் போக்கர் யாராவது, தேங்காய் உடைத்தால் உண்டு, விளக்குப் போட்டால் உண்டு. வருஷத்துக்கு ஒரு தடவை: எண்ணெய் முறை உண்டு-உம்-கோழிப் பலி கூட உண்டுஅவ்வளவுதான். கண்ணம்மா கோவில் திறந்தேயிருக்கும் சதா, அதுதான் எனக்கு ரொம்பவும் பிடித்தமான விளை யாட்டு ஸ்தலம்: '