பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன் 25

வளர்ச்சி என்றால், வெறும் உடல் வளர்ச்சி அல்ல-அறிவின் வளங் கூடத் திடீரென்று அதிகரித்து, நான் புதுக்காந்தி யுடன் விளங்கினேன். என் அறிவு வளர ஆரம்பித்து விட்டது. திடீரென்று அதன் மந்தம் மறைந்து, அது அற்புத மான பக்குவமடைந்தது. அம்மு வீட்டுத் தேவராஜன்,

அப்பி வைத்த மண் சுவர் மாதிரி இருப்பானே; அவன் எப்படி இவ்வளவு துடியானான்!” என்று எல்லோரும் ஆச்சரியமடை

பும்படியாயிற்று என் புத்தியின் வளர்ச்சி, எனக்கு என்ன

உடம்போ, ஏதோ என்று கூட, அம்மா பயந்துவிட்டான்.

நான் பழைய மொத்துக் குட்டியா'யில்லையே இப்பொழுது எனக்கே என் திடீர்ச் சுறுசுறுப்பைக் கண்ட பிரமிப்பில்

ஒரு பீதியும் கலந்திருந்தது. நாளுக்கு நாள், நான் வளர

வளர, அதுவும் அதிகரித்துக்கொண்டே வந்தது.

தோட்கள், வாரங்கள், வருஷங்கள் சென்றன, இடையில் அப்பா இறந்துவிட்டார். எனக்கு இப்பொழுது இருபத்து இரண்டு வயது. எனக்கு என்னையே அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. பன்றி மயிர்மாதிரி கட்டையாயிருக்கும் என் மயிர் ஒரே சுருள் கொத்தாய், கரும்பட்டுப்போல், பள பளவென்று மின்னியது. என் கண்கள், விரிந்து, பரந்து ஜ்வாலை வீசின. என் நடையுடை பாவனை எல்லாவற். றிலும் , ஒரு தனிக் கம்பீரம், ஒரு தனி அழகு-சீ, என் காலில், நானே விழுந்து கொள்வதுபோல் இருக்கிறதே என் பேச்சு: இருந்தாலும், நான் சொல்வதெல்லாம் மெய், மெய், மேய். "'

ஒருநாள் நள்ளிரவு. பெளர்ணமி தினம் அற்புதமான நிலவு. திடீரென்று விழித்துக்கொண்டேன். என்னை ஏதோ ஒரு குரல் தட்டியெழுப்பியது.

  • தேவராஜ்'

"ஆம், மறுபடியும் அதே குரல்தான்; ஆனால் ஒரு முகமும் தெரியவில்லை. வெறும் குரல்தான்... தேன சொட்டும் குரல். அவ்வழைப்பை எதிர்க்க வேண்டுமென்று.