பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ ஒா, ச, ராமாயிருதம்

ஒரு இரண்டு கணத்துக்கு உலக அந்தியில் மெளனம்

திடீரென்று கண்ணம்மாள் ஒரு சிறு சீறினாள் பார்,

இப்பமென்றே நான் பயந்துவிட்டேன். அவளுடைய

மோசம் பண்ணினாயா?- என்றாள், மெதுவாய் இரண்டே வார்த்தை,

கண்ணம்மா-இதோ என்னைப் பார்

நான் ஒன்றும் பார்க்கவும் மாட்டேன், கேட்கவும் மாட்டேன்-நீ என் புருஷன்-நீ என்னைத் தொட்டுத் தாலி கட்டினாய்-நீ எனக்குச் சொந்தம். இதோ பார், நீ கட்டிய சரடு என் கழுத்தில் தொங்குகிறது. பார்த்தாயா, பார்த் தாயா?-’

கண்ணம்மா, இதில் அர்த்தமில்லை-நான் தான், நீ-’

கண்ணம்மா பளிர் என்று கல்லின்மேல் ஒரு அறை அறைந்தாள். ஒரு நீல ஜ்வாலை, அவளது விரல் நுனி களினின்றும் புறப்பட்டு, இருட்டில் மின்னென மறைந்தது.

எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை-என்னைத் தொட்டுத் தாலி கட்டின உன் கையால், இன்னொருத் திக்கும் அதைக் கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேனா என்ன? (அவள் சிரிப்பு புகைந்தது) என்னைக் கண்டு, அதற்குள் சலித்துவிட்டதா?-ராஜா-சொல் அதற்குள் வெறுத்துவிட்டதா?’

எங்கேயோ ஒரு பிரதேசத்தில், அற்புதமான அழகுடன் ஒரு மான் சஞ்சரிக்கிறதாம்; யாராவது வழிப் போக்கர் போனால், வெகு சகஜமாய்ப் பக்கத்தில் வந்து கையை தக்குமாம். அது நக்கும் ஆனந்தம் சொல்லமுடியா தாம். நக்கி நக்கி இரத்தம் பீறிட்டுக்கொண்டேயிருந்த