பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன் 金5

போதிலும், அதன் மாய வலையில் அகப்பட்ட ஆள் உட லெல்லாம் திருப்பித் திருப்பிக் காண்பித்துக்கொண்டே யிருப்பானாம். கடைசியில், அது கையை நக்கி, உடலை நக்கி, சதையை நக்கி, இரத்தத்தை நக்கி, அந்த ஆள் ஒரே மாமிசப் பிண்டமாகி, கொஞ்ச நஞ்சம் துடித்துக்கொண் டிருக்கும் உயிர் ஒருவழியாய்ப் போமளவும், அந்தப் பிண்டம் திருப்பித் திருப்பிக் காண்பித்துக் கொண்டேயிருக்குமாம்.

அதேமாதிரி தான் இருந்தது கண்னம்மாளின்மேல் எனக்கு இருந்த உணர்ச்சி. அது வெறுப்போ, விருப்போ...

அண்னம்மா இம்மாதிரியெல்லாம் பேசாதேஎங்கம்மா-இன்றைக்கோ நாளைக்கோவென்று அவள் உயிர் ஊசலாடுகிறது-அவளிஷ்டம் இது

நான் உன்னை நம்பி மோசம் போனேன். உன் மேலிருந்த மோஹத் தில் கான் முழுகியதில், சற்று அயர்ந்து விட்டேன். நீ சமயம் பார்த்து, நழுவப் பார்க்கிறாய்ஆனால் உனக்குத் தெரியாது நான் யார் என்று-நான் கண்ணம்மா- நான் தேவதை- நான்

அவள் உடலிலும் முகத்திலும் திடீரென்று பாய்ந்த ஒளியை நினைத்தால்- பார் என் உடல் மயிர்க்கூச்செறி கிறது.

அப்படியானால் , என் தாயாரைத் தெளிவி-அவள் வியாதியைப் போக்கிவிடு-இந்தக் கலியாணம் ஒத்திப் போகும்’ என்றேன்.

அவளுடைய முகத்தில் விசனம் நிறைந்தது. அவள் விஷயத்தில் நான் தலையிட முடியாது. அவள் ஆயுள் எல்லையை அடைந்துவிட்டாள். இன்னும் மூன்று நாள் தான் அவளுக்கு-ஆயுளை நீட்ட- என்னால் இயலாதுஆனால் ஒன்று செய்யலாம்" என்று யோசனையுடன்

இழுத்தாள்.