பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கணவன் 37

அவள் மறுபடியும் கலகலவெனச் சிரித்தாள். நான் ஒன்றும் புரியாமல் திகைப்புடன் நின்றேன். அவள் திடீ ரென்று, என்னை அனைத்து, என் வாயில் ஒரு முத்தமிட்டு என்னைத் தள்ளினாள்.

ராஜா-இன்றைக்கு ஏழாம் நாள் உன் வாய் அடை பட்டுவிடும். நீ ஒருவருடனும் ஒரு வார்த்தையும் பேசமுடி யாது. உன் ஆசை மனைவியுடன் ஒரு வார்த்தையும் ஆட முடியாது. அவளது உயிர்மேல் உனக்கு அக்கறையிருந்தால் அவளைத் தொடவே தொடாதே-அவளை நீ தொட்டதை நான் கண்டால், முதல் தடவை உன்னைத் தண்டிப்பேன்; மறுமுறை அவளையே கொன்றுவிடுவேன்-மறுபடியும் என் ஸ்பரிசம் உன்மேல் படும்வரையில், உன் வாய்ப்பூட்டு திற வாது. கடைசியாய், நீயாக என்னிடம் வரும் வரையில் நான் காத்துக்கொண்டேயிருப்பேன்-எனக்குச் சொந்தமானதை நான் லேசில் விடுகிறவளல்ல-நான் கண்ணம்மா-’

கண்ணம்மா!' என்று அலறிக்கொண்டே அவளிடம் ஒடினேன். அவள் சிரித்துக்கொண்டே கோவிலுக்குள் புகுந்து மறைந்தாள். நான் துரத்திச் சென்று, கல்வில்தான் மோதிக்கொண்டேன். அவளைக் காணோம். அவளது சிரிப்புத்தான் ஒலித்தது.

அப்புறம் நடந்த விஷயந்தான் அநேகமாய் உனக்குத் தெரியும். நம்மிருவருக்கும் மணம் முடிந்த அன்று சாயந் திரமே அம்மா இறந்துவிட்டாள். என்மீதுள்ள சாபம் பலிக்கும் வேளை நெருங்கிவிட்டதால், நான் ஊரைவிட்டுப் புறப்பட்டு, உன்னைக் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிட் டேன். அப்படியிப்படி ஐந்தாறு மாதமும் கழித்துவிட் டோம். கடைசியில் கண்ணம்மாளே வெற்றி பெற்று விட்டாள்

அவன் பேசி முடித்து, சற்று அடங்கினான்.