பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彦委 வா. ச. ராமாமிருதம்

மழை நிதானமாய் ஊற்றிக்கொண்டிருந்தது. மெழுகு, வர்த்தி எரிந்து உருகி அடியில் இறங்கிவிட்டது. கொஞ்ச நேரம் அதையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான்.

நான் நாளைக் காலை ஊருக்குப் போகிறேன்' என்றான். கண்ணம்மாவிடம் போகிறேன். இம்மாதிரி வாழ்க்கை நமக்குச் சாத்தியமில்லை. ஒரு சமயம் இல்லா விட்டால், ஒரு சமயம் ஏமாந்துவிடுவோம்-நீ இங்கேயே. இருப்பதென்றால் இரு அல்லது வீடுபோய்ச் சேர்-என்

சொத்தெல்லாம் உனக்குத்தான்,'

த8:த தி

அவன் எழுந்து போய், மறுபடியும் ஜன்னலண்டை நின்றான், பின்புறம் கையைக் கட்டிக்கொண்டு,

அவள் எழுந் திருக்கவும் சக்தியற்று, உட்கார்ந்த இடத்திலே சுருண்டு கிடந்தாள். அவனுக்கென்ன பைத் தியமா? அவள் இத்தனை நேரம் கேட்டதெல்லாம், அவனுடைய மூளைக்கோளாறின் கற்பனையா?

ஆனால், அந்த அறை?-கண்ணம்மா, அவன் கன்னத் தில், வாயில் இரத்தம் சிதறும்படி அறைந்த அறை? அது நிஜந்தானே?

இம்மாதிரி அவன் தனக்கு எட்டியும் எட்டாமலே இருக்கும் பயங்கரம் அவளுடைய உடலில் ஊற ஆரம்பித்த பொழுது, அவளது உடல் ரத்தம் சுண்டியது.

குப்!-- -

மெழுகுவர்த்தி அணைந்துபோயிற்று. 鬱