பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸகுண்டில், ஊரும் நெளியும், சில பிம்பங்கள்

எங்கள் ஊரை வளைத்து ஒரு வாய்க்கால் ஒடுகிறது. வடக்கு எல்லையில் ஜலம் ஸ்படிகம். உன் நெஞ்சின் பிம்பத் தையே பார்க்கலாம். ஆனால், மற்ற திக்குகளில் அந்தத் தூய்மை இல்லை. கீழண்டை ரொம்ப கரைசல். இது ஏன்? ஒருநாள் வாய்க்காலின் வடக்கு நூலைப் பிடித்துக்கொண்டு கரையோரம் நடந்துகொண்டே போனேன். அப்போ நானும் சின்னப் பையல்தானே! அன்றையப் பொழுது அப்படி போச்சு, அது ஒரு வேடிக்கை.

குரங்கு நியாயம் குப்புசாமிப் பிள்ளைப் பண்ணை. ஒரே இடமாக அத்தனை வயலையும் எப்படித்தான் வளைச்சுப் போட்டானோ? இந்தப் பக்கம் ஆற்றங்கால், அந்தப் பக்கம் ஏரிப்பாய்ச்சல், நடுவே கண்ணுக்கெட்டியவரை கண்ணுக்குக் குளுமையா பயிர்ப் பச்சை காற்றோட்டத்தில், ஒரே ரஹஸ்யம் பூத்துக் கிளுகிளுக்குது. அங்கங்கே ஏத்தக்கால் வேறே. ஊரில் கறுப்பு ஓடினாலும், பிள்ளைவாள் காட்டில் என்னிக்கும் வெள்ளம்தான்! அதுதான் குரங்கு நியாயம் போலும்...இத்தனைக்கும் பிள்ளை குட்டி இல்லே, செட்டித் தெருவில் வீடு, மூண்டுக்கு மாடி. மூணாவது மாடிக்கு வேலையே இல்லை. ஆனால் காரணம், தன் கட்டடம் ஒரு முழமேனும் உசத்து காட்டனுமாம்... நாட்டுப்புறத்தில், பிள்ளையென்ன-எல்லாருக்கும்தான் இதுமாதிரி ஒரு வீம்பு!