பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்குண்டில் சில பிம்பங்கள் 金교

கவிழ்ந்து போவே! என்னா சர்வீஸ்ஸு, என்ன சட்ட அறிவு, என்னா கோட்பாடுக் களஞ்சியம்... அத்தினியும் விரல்துரிை யில் அத்துப்படி வக்கீலும் ஜட்ஜும் அவன் வாக்குமூலத்தை வாயைப் பிளந்துகிட்டு கேட்டுக்கிட்டு இருப்போம். எங்கள் அத்தனை பேரையும் அவன் முழங்காவில் போட்டு, கண் ணுக்கு எண்ணெய் கட்டி விடுவான்ய்யா வத்தல்மிளகாய் இல்லே. பச்சைமிளகாய் போட்டுக் காய்ச்சின எண்ணெய்! தாங்கள் அப்புறம் கண்ணையே திறக்க முடியாது, அந்தக் கேஸ்வரை அந்தக் கேஸ் என்று, அந்தந்தக் கேளாய், கடவுளே போட்ட தாயம் ஆனாலும் அவரும் கண்ணைக் கசக்கிட்டுத்தான் பார்க்கணும்:

தாயம் அவருதா, குப்புசாமிப் பிள்ளைப் போட்டதா? பைத்தியாரா நீ ஆடிக்கிட்டேயிரு, தாயம் போட்டுக்கிட்டே யிரு.பந்தயம் அத்தனாச்சியும் என்னுதுதான். குரங்கு நியாயம் குப்புசாமிப் பிள்ளை, கஷ்கு முஸ்கு கட்டை உடம்பை தாயக்கட்டான் மேலேயே கவிழ்ந்து படுத்துக் கிட்டு, குட்டைக் கையால் கட்டான் கட்டானா, அத்தனை வயலையும் அணைச்சுப் போட்ட சொத்தல்லவா இது?

இப்போ ஸ்பஷ்டமாக அதற்குரிய பாஷையில் புரிகிறது. ஆனால் அப்போ கண் கண்ட தைக் கண்ணால் பார்த்துக் கொண்டு, வாய்க்கால் கரையோரம் அது டோகும் வழி வளைந்து ஒடுகிறேன்.

திடீரெனப் புளிச்ச கஞ்சியின் வெடிப்பு நாற்றம் மூக்கைப் பொசுக்கறது. குடலைக் குமட்டறது. திருப்பத் தில், ஜலத்தைப் பாம்பு தீண்டினாற்போல், கரும்பச்சையாய் மலைப்பாம்பு தடுமனுக்கு ஒரு சாயம் நீளமாகக் கரையி லிருந்து புரண்டு வந்து கலந்தது. ஒ! இதுதானா கலங்கல்நான் ஒடி ஒடித் தேடிப் பிடித்த காரணம்?

இத்தனையும் ஏன் எதற்கு, இவ்வளவு விஸ்தாரமா மன சில் கோலமோ கிறுக்கலோ போட்டுக்கொண்டு வந்தது

ஆ, ஞாபகம் வந்துவிட்டது.