பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரளகுண்டில் சில பிம்பங்கள் 盛念

தில் ஆங்காங்கே விழித்துக்கொள்ளும், இரவுபூரா தன்னைச் சூழச் சிந்தும் ரத்தத்தைப் பார்த்துக்கொண்டு, பக்தர்கள் அவ்வப்போது தீற்றும் ரத்ததிலகம் நெற்றியில் பளபளக்க, ஒழுக. ஜே மோகாம்பரி தேவி, தன் வண்டை விழிகளில் கருணை பொழிய வீற்றிருப்பாள்.

எல்லாம் சொல்லக் கேள்விதான்.

மலைமேல் அவள் பெயரைச் சொல்லி கொலை நடத் தாலும் கேள்வியில்லை,

அவள் பலி அவளுக்கு அர்ப்பணம்,

கொலைகள் நடந்திருக்கின்றன.

சொல்லக் கேள்விதான்.

நான் அவ்வளவு துரரம் போனதில்லை.

ஆசைதான்.

s - . . . . -- - ^e

ஆனால், காமுப்பாட்டி காலை ஒடித்து விடுவாளே! ஆனால், காமுப்பாட்டிக்குப் பயந்து பயந்தே, செத்துச் செத்துப்போய்க்கொண்டிருக்க எத்தனை உசிர் இருக்கு? ஒரு

ஆளுக்கு ஒண்ணுதானே அதுவும் ஒரு வழியா சாகமாட் டேன்கிறதே!

இந்தப் பரந்த உலகம், என்னுடைய உலகம் , இவளுடைய நாலு சுவர்களுக்குள்ளேயே தான் அடங்கிப் போயிடனுமா? நான் வாழமாட்டேன்; உன்னையும் வாழ விட மாட்டேன். இதுதானே இவளுடைய வீம்புலகம் அதில் எதிரும் புதிருமா நாங்கள் இருவர் தானே, அவளைப் பொறுத்தவரை, அதன் பிரஜைகள் :

ஆனால்,

ஒருதடவை கால் முளைத்த பிறகு, அதனால் எத்தனை நாள் காத்திருக்க முடியும்? ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு-ஒரு வருடம், இரண்டு வருடம்-அட, என் கடவுளே: