பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లేడ్లీ லா ச. ராமாமிருதம்

நான் முதன் முறையாக ஒடிப்போய் இன்றைக்கு இரண்டு வருடங்கள் ஒடிப்போச்சா? அட, எனக்கு வயசு பதினேழா? இன்னும் முதல் முகrவரம்கூடப் பண்ணிக்கல்லே. அதுக்குக் காமுப்பாட்டியைன்னா காசு கேக்கனும்! மீசையில் பொன் னரும்பு பளபளக்கிறது.

ஒருசமயம் யுகம், ஒருசமயம் நிமிஷம். திமிஷமா இரண்டு வருடங்கள். ஹல்ம் இத்தனை நாள் இங்கே

நான் என்ன வெட்டி முறிச்சிண்டிருந்தேன்? ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேனா ஊசலாடிக் கொண்டிருந்தேனா?

உதறிக்கொண்டு எழுந்தேன். ஊஞ்சலை, ஊஞ்சல் சங்கிலியை, சங்கிலியின் உச்சியில் சொருகின புல்லாங் குழலை ஒருமுறை பார்த்தேன். தோப்பை ஒருமுறை சுற்றிப் பார்த்துக்கொண்டேன். சட்டையுரிப்பில் ஒரு விடுதலை, பழஞ்சட்டை ஒரு விசனம், பழகிய சட்டை.

வீட்டுள் நுழைந்தபோது, காமுப்பாட்டி கூடத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தாள். அவள் நினைப்பும் இங்கு இல்லை வாயில் குஞ்சிரிப்பு. தரையிலும் லேசா மிதப்ப லாகிவிட்ட அந்த நிலையில், அந்த முகம் அழகிட்டாற் போலக்கூட எனக்குத் தோன்றிற்று. அதற்கு முடிந்தால்...

நான் நேரே இருட்டறைக்குப் போய், பானையில் திணித்து வைத்திருந்த சொக்காய், துண்டு, வேட்டி என்கிற பெயரில் இருக்கும் ஒன்றிரண்டு கந்தலைப் பையில் திணித் துக்கொண்டு புறப்பட்டேன். -

காமுப்பாட்டி... ஏனென்று தெரியவில்லை.

வெறும் காமு"வென்று அழைத்துப் பார்த்துக்கொண்

டால், அவள் வயதுக்கு மிகவும் சிறியவளாக த்வனிக்கிறாள்.

வெறும் பாட்டி' யாக நினைத்துக்கொண்டாலும் பொருந்தவில்லை. அவ்வளவு வயசு அவளுக்கு ஆகவில்லை.