பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器套 லா, ச. ராமாமிருதம்

நிமிசத்துலே பயமுறுத்திட்டீங்களே! You naughty

தி: Man}.** -

இனி இப்படியே பொழுதைப் போக்கிவிடுவாள். தெரிந்துவிட்டது.

தீபாவளி ஸ்வீட்ஸ் பெட்டிகள் இரண்டு மூன்று வந்தன.

'அம்பி ஒண்டிக்கட்டை.இத்தினியும் வெச்சுக்கிட்டு என்ன செய்யப் போlங்க?"

1 ைஅ are welcome அவளிடம் கொடுத்தேன்.

அதுக்காக ஒண்னுகூட வெச்சுக்கலியா ஒண்ணு வெச்சுக்குங்க."

எனக்குத் தேவையில்லை. ஆமா, நீங்க என்ன செய்யப் போlங்க? உங்கள் பங்கு வேறே இருக்கு?’’

வேண்டியவங்களுக்குக் கொடுப்பேன். நல்ல பேர் கட்டிப்பேன். வாங்கிக்க மனுசாளாயில்லே?" சட்டென முகம் சிடுத்துப் பெட்டிகளை என் பக்கம் தள்ளினாள்.

இல்லே, வித்துடுவேன்.'

சமாதானம் பண்ணி பெட்டிகளை அவளிடம் திணித் தேன்.

சாதாரணமாக ஒரு மனோதத்துவக் கோட்பாடு: கனவு என்பதை அடி ப்ரக்ஞையில் புதைந்து கிடக்கும் அந்தரங்க ஆசாபங்கங்கள், ஏக்கங்கள் தங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வடிகால் என்று. அப்படியானால் கனவில் (யார்?) தத்த முத்தம் எதன் அடையாளம்?

இத்தனைபேர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். கஸ்டமர்கள் தெரிகிறார்கள். வங்கிக்கு வெளியே ரோடில் வாகனங்கள் பறக்கின்றன. ஆனால், நெஞ்சில் வெறிச் சோடி நிற்கிறேன்.