பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முத்தம் 65

அட, கல் பெஞ்ச் வேறேயா? அமர்கிறேன். அந்திக் காற்று சாமரம் ஆடி நெற்றி முத்தை ஒற்றுகிறது.

முத்தத்தின் மூச்சு. என்ன சங்கடம்... இந்த முத்தம் நெஞ்சு முள்ளில் மாட் டிக்கொண்டு மாயமான் காட்டுகிறது; என்னைத் தன் பின் விளிக்கிறது. இங்கேதான் எங்கோ மாவும் தென்னையும் சூழ்ந்து இந்த சிலந்திக் கூட்டினுள் சிறையிருக்கிறாள். -

என் ராஜகுமாரா: வா! வா!' No, mo, இது இந்தச் சமயத்தின் சொக்குப்பொடி தெரிகிறது.

ஆனால், தொண்டையை அடைக்கிறது. அந்தரத்தில் பூமி தன் அச்சில் யுகாந்த காலமாய்ச் சுழலும் தனிமையை உணர்ந்த திரண்ட சோகம். அதன் அத்தனை ஜீவராசிகளுக்கும் பங்காகும்போது நேரும் வேதனையின் ரூபிணிதான் என் இளவரசி, கனவில் என் உதட்டில் பதிந்த முத்தம் அவள் அனுப்பிய சேதி, சேதியின் மர்மம் என் இதய நரம்பைச் சுண்டும் சோகஸ்-காநாதத்தின் விண்விண்ணில் தத்தளிக்கிறேன்.

பெஞ்சின்மேல் தாழ்ந்த பூவரச இலைகளினூடே ஒரு நrத்ரம் என்னைச் சிந்திக்கிறது.

இருகைகளையும் அதை நோக்கி நீட்டுகிறேன். என்

எண்ணத்தின் ப்ரதிஷ்டாவந்தி, வா என்முன் பிரத்யகடி மாகு!’

இலைகள் சலசலத்தன. அந்த சலனத்தின் நக்ஷத்ரத் துள் அவள் கலைந்தாள்.

ஒற்றைப் பகதி வானில் தன் ஜோடியைத் தேடிக் கொண்டே எட்ட மறைந்தது.

5 سه.49