பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முத்தம் 67

இன்று வருவாளா? முத்தம் தருவாளா? தன்னைக் காண்பித்துக்கொள்வாளா? எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டிருக்கிறதா? இருப்புக் கொள்ளவில்லை. அறைக்கு வெளியே மொட்டை மாடிக்கு வருகிறேன். வானம் இருண்டிருக்கிறது. அங்குமிங்குமாய்த் தெரியும் ஒன்றிரண்டு நகத்ரங்களும் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. -

என்னைக் காப்பாற்று!" அம்மா இல்லை. ’ இரண்டு சொட்டுக்கள் என் முகத்தில் விழுகின்றன, என் கைப்பிடிக்க என்று வருவான் எனக் காத் திருக்கும் கன்னியின் கண்ணிர்த் துளி. -

பளிச் சென நெஞ்சில் வெளிச்சம் ஏற்றிக்கொண்டது. உள்ளே போய் ஒரு பேப்பரை எடுத்துக் கடிதம் எழுதினேன்.

வரிகள் வளர வளர கனம் லேசாயிற்று.

மன்னிக்கு: நான் சம்மதம். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் என்ன சொன்னாலும், எது செய்தாலும் சரி, ஆனால் சுருக்க சுருக்க வழி இப்பத்தான் தெரிந்தது. தெரிந்துகொண்டே இருக்கிறது.” 鑒 -இந்தியா டுடே