பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் 68

அவன் கைக்கடியாரத்தைப் பார்த்துக்கொண்டான். அவனுக்கு அது ஒரு பழக்கம். அவனுக்கு எப்பவுமே நேர மிருப்பதில்லை. அவன் வருவதற்குள் அவளுக்கு, உயிர் போய்விட்டது. ஒரே பிள்ளை, மஹானுபாவன். கரெக்டா கொள்ளியிட வந்துட்டான். அவனுக்கு எப்பவுமே நேரம் இருப்பதில்லை.

அப்பா, கோவப்படாதீங்கோ. சட்டென மண்டி யிட்டு அவர் வலதுகையைத் தன் இரு கைகளிடையே பொத் திக்கொண்டாள். கூசிற்று. விடுவித்துக்கொள்ள முயன்றார். அவள் விடவில்லை. இப்போதெல்லாம் இதுதான் சகஜம் போலும்!

நீங்கள் ரெண்டுபேருமே எப்போதோ எங்களிடம் வந்திருக்க வேண்டும். நாங்கள் கட்டாயப்படுத்தாமல் இருந் துட்டு, ஏமாந்தும் போயிட்டோம். இப்ப வேனும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கப்பா, இனிமேல் நீங்கள் ஒண்டியா இருக்க வேணாம்.’’

பரவாயில்லை. அப்பா உலகம் முழுக்க அஸ்தமிச்சுப் போயிடல்லே,

உன் பேர் என்ன? சமாதானத்தில் முறுவலித்தார். அவர் கேள்வி அவருக்கு ஆச்சரியமாகப் படவில்லை . எப்பவோ, வருடத்துக்கு ஒரு முறை அதுவும் நிச்சய மில்லை-வந்து ஒருநாள் தங்கினால் அதிகம். வந்தாலும் இவளோடு எனக்கெங்கே நேர்ப் பேச்சு? பின்கட்டுலே அவளும் இவளும் பேசிண்டிருந்திருக்கலாம். இப்போ பட்டணத்துலே விட்டுவிட்டு வந்திருக்காளே பேராண்டி, அவன் பேரும் தெரியாது. எனக்கும் வயசாச்சு. ஞாபக சக்தி குறைஞ்சுண்டு வரதோ என்னவோ?

எழுந்து நின்றாள்.

என் பெயர் விஜி.' தாக்கிவாரிப் போட்டது.