பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 லா ச. ராமாமிருதம்

உள்ளே இறங்கிடுவான். ராவரைக்கும் காத்திருப்பான்னு அவசியமில்லை. வகையான நேரம், பொழுது, நம்மைவிட அவனுக்குத் தெரியும்; இந்த வீட்டைக் கட்டி இதைக் காக்கற பாடு, இதன் மேலே கடன்பாடு, ரெண்டுபேரும் சம்பாரிச்சு, ஆயுசே பத்துமா தெரியல்லியே! சரி, வரேன். விடு பத்ரம் பத்ரம்!"

பேசிக்கொண்டே இறங்கிப் போய்விட்டாள். கட்டிலில் ப்ரமை பிடித்தாற்போல உட்கார்ந்திருந்தார். தும்பை நீள மாக்கி மேயவிட்ட மாடுபோல், வீட்டுள் தன் சிறை நிலை முழுக்க உணரச் சற்று நேரமாயிற்று.

சாப்பிட்ட பின்-சாப்பாடா அது? குழம்பா ரஸ்மா அதுவே தெரியவில்லை. ஆறிப்போய் விறைத்த சோறு: யாருடைய எச்சில் தட்டோ? பட்டனத்தில் இலை கிடைக் காது. கிடைத்தாலும் கட்டுப்படி ஆகாது. அவளுக்கா பேசத் தெரியாது? எச்சில் இட சாணம் காணோம்-துரங்க முயன்றார். துரக்கம் வரவில்லை. வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வந்தார்.

அமர்க்களமாத்தான் கட்டியிருக்கான். வி ச | ல மா இரண்டு படுக்கையறைகள். பெரிய பட்டைவாசல் (அதான் ஹால்) , சமையலறை, ஸ்னான அறை, கழிப்பு அறை, கீழே போல் மாடியிலும் படுக்கை அறைக்கு ஒரு கழிப்பு அறை, மொட்டை மாடியிலும் ஒரு கழிப்பறை. இது என்ன கழிப்பறை மோகமோ? தலையெழுத்து! அப்படி ஒரு உடம்புக்கு வந்துடுமா அல்லது சோம்பேறித்தனமா? அங்கங்கே வாஷ்பேஸின், தரையூரா, கீழும் மேலும் மொஸாயிக். கால் வழுக்கி இடுப்பு சரிஞ்சதோ என் வயசுக்கு அவ்வளவுதான். சோபா செட்டுகள், விதவிதமான செளகரியங்களில் நாற்காலிகள். இந்த நாளில் அசல் தேக்கு இவனுக்கு எப்படிக் கிடைச்சது , என்ன விலையிருக்கும்? உசிரையே கொடுத்திருக்கான் இல்லை. இவனை எப்படித்