பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் 73

தனியா சொல்றது அவளும்தான் கொடுத் திருக்காள், ரெண்டுபேருக்குமே நாலு ஸ்தானத்தில் சம்பளம்னு சொல்லக் கேள்வி. ஆனால், போறல்லே போறல்லே கடிதாகக்குக் கடிதாக புலம்பல். அப்பா பொடிமட்டைக்கு காசு கேட்டுடுவான்னு பயமோ என்னவோ?’’

ஆமாம், இந்த மூணு பேருக்கு அதில் ஒண்ணு அரை டிக்கெட். இவ்வளவு பெரிய வீடு தேவைதானா? ஆனால், நான் கேக்க முடியுமா? "நான் சம்பாதிக்கறேன், நான் கடன் படறேன்’ இந்த நாள் சித்தாந்தமே இப்படித்தானே யிருக்கு?

கிருஹப்ரவேசத்துக்கு நா போக முடியல்லே, வயல்லே தாத்துப் பிடுங்கற சமயம். அவள் போய் வந்தாள். வீட்டைப் புகழ்ந்து அவளுக்கும் மாளல்லே. ஆனால், அடுத்த நாளே வந்துட்டாள். ஏன் ஒரு வாரம் இருந்துட்டு வரதுதானேன்னு கேட்டதுக்குப் பிடி கொடுத்துப் பதில் சொல்லல்லே. நானும் அப்புறம் கேட்டுக்கல்லே. ஏன் கேக்கனும்? அவளுக்குத் தெரியாதா? அவளுக்கு என்ன தெரிஞ்சுதோ?

திடீரென்று தாங்கமுடியாத ஆயாசம் அழுத்திற்று. நின்ற இடத்திலேயே உட்கார்ந்துவிட்டார். இங்கே என்னால் தள்ள முடியுமோ? ஆனது ஆகட்டும், இன்னி ர த் தி ரி ேய ஊருக்குக் கிளம்பிடுவோமா? கையில் பணமில்லை. அவனைக் கேட்கவும் கூச்சமாயிருக்கு. ஆனால் பெட்டியில் அவ்வப்போ, சொக்காய் வேட்டி மடிப்புகளி னிடையே போட்டு வச்சதைப் பீறாய்ஞ்சால் டிக்கெட்டுக்குத் தேறலாம்,

ஆனால் அங்கே போய் என்ன பண்றது? இவாளே சுட்டிக்காட்டின மாதிரி ஒண்டியா எத்தனை நாள் பொங்கித் தின்ன முடியும்? மூணாம் வீட்டிலிருந்து அம் முப் பாட்டி யைத் தான் அழைக்கணும். அவளுக்கோ கை சுத்தம்