பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் 77

அவன் கை அவர் கையுள் புகுந்துகொண்டது.

தாத்தா நீங்க பேசுங்களேன். பாட்டியைப் பத்தி." வண்டு ஒன்று ஜன்னல் வழி உள்ளே நுழைந்து அறை யைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அதன் ஒரே மூச்சுக் கூவல் விதவிதக் கோடுகளை இருளில் கிறுக்கிற்று: அதெப்படி இந்த வேளை திசை தப்பிப் போச்சா?

இல்லை நீதானா?

  • ஏறக்குறைய உன் வயசில், கார்த்திக், உன்

வயசென்ன?”

ஆறு.’’ -> *சரி, அவளுக்கு எட்டு இருக்கும். இந்த வீட்டுக்கு வந்தாள்.

இந்த வீடா, என்ன தாத்தா, இது கட்டியே வருஷம் ஆவல்லே.’’

இந்த வீடுன்னா இந்தக் குடும்பம்.' “Family?’”

ஆமாம், இந்தக் குடும்பத்துள் வந்தாள்.' அப்படின்னா?’’ அப்படின்னா எனக்கும் அவளுக்கும் கல்யாணம்." கலியாணமா. அவ்வளவு சுருக்காகவா?’ பையனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நீங்க little boya little giri!” ஆமாம் கார்த்திக். எங்கள் நாள் கவியாணங்கள் அப்படித்தான்.'

நினைவின் ரேக்கு சுருள் கழன்றது. உள்ளுர கம கமத்தது. நாயன வித்துவான் மென்ற தாம்பூலம்போல்.

சொக்காய், பாவாடையிலே கதவு மூலையில், அது ல்லேன்னா துணைக் கட்டிண்டு, அவளுடைய அப்பா அம்மா நினைப்பிலே ஏக்கமா நிப்பா பார்க்கப் பாவமா யிருக்கும். ஆனால் நாங்கள் பேசமாட்டோம். ’’