பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

摩擎 லா, ச. ராமாமிருதம்

மின் 'A', 'C', 'B' காம்ப்ளெக்ஸ், லிவர் எக்ஸ்ட்ராக்ட். இப்படிப் பேசுங்கோ, எங்களுக்குப் புரியும். ஆனால் உங்க ளுக்கு அந்தப் பாஷை தெரியாது’ சிரித்தாள். இதோ அலமாரியைப் பார்த்தீங்களா? திறந்து காண்பித்தாள்.

மருந்து ஷாப்பே நடக்குது. அப்படியும் இவன் இப்படி யிருக்கான்னா, நாங்கள் என்ன செய்வோம்? நாளடைவில் சரியாப் போயிடுமின்னு விட்டுட வேண்டியதுதான். இந்த வீட்டையும் அதன் மேல் சுமையையும் நினைச்சா என்பாடே துக்க மாத்திரையாயிருக்கு இந்த நாள் Medical system. யாரை விட்டது? வியாதியிருக்கணும்னு தேவையில்லை. ஆனால், மாத்திரைகளை முழுங்கியாவணும். உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் உங்கள் பிள்ளையைக் கேளுங்க."

பிள்ளைக்கும், நாட்டுப்பெண்ணுக்குமிடையே கண் சிமிட்டலும் கள்ளச் சிரிப்பும் கிழவருக்குப் புரியவில்லை.

அப்புறம் அப்பா, பையனுக்கு உடம்புக்கு வரதைச் சமாளிக்க light இருக்கணும். அவனுக்குச் சரியா பெரிய வங்களும் சேர்ந்துக்கிட்டுப் பெரிசு பண்ணக்கூடாது. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாத்தான் இருக்கணும். நீங்கள் செல்லம் கொடுத்து அவனுக்கு discipline குறைஞ்சு போச்சு. ”

கிழவர் திடுக்கிட்டார்: ' என்ன பேசறே? என்ன செல்லம் கொடுத்தேன்? குழந்தைக்குச் செல்லம் கொடுக் காமல் அவனோடு மல்லா கொடுப்பா?"

இல்லேப்பா, நீங்கள் வந்தப்புறம், அவனுக்குப் பாடங்கள்லே கவனம் குறைஞ்சுபோச்சு. இறங்கிட்டான். உங்களிடம் எனக்குச் சொல்லவும் முடியல்லே, உங்களுக்குச் சொன்னாலும் புரியாது. பள்ளிக்கூடத்துலே அட்மிஷன் ரிசர்வ் பண்ணிக்கிட்டு அப்புறம் குழந்தையைப் பெத்துக்கற காலம் இது.”