பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம்

அவன் கைகள் உரம் மிகுந்த கைகள், அதுவும் முழங் கையிலிருந்து விரல்நுனி வரை நல்ல வலிவு. தறியில் உட்கார்ந்து நாடாவை ஒட்டி ஒட்டி நரம்புகள் கெட்டிப் பட்டுப்போன கைகள். ஒரோரு சமயம் வெகு வேகமாய் நெய்யும்பொழுது புஜங்களில் நரம்பு முடிச்சு பந்துபோல் எழுந்து அமுங்குவதும்: கண்ணவிந்து திக்குத் தெரியாமல் தவிக்கும் எலிபோல், மூலைக்கு மூலை, நாடா முன்னும் பின்னும் ஒடுவதும் வேடிக்கையாயிருக்கும்:

ஒரு நாளைக்கு ஒரு பீஸ் (14 முழங்கள்).

அந்தப் பையனுக்கென்ன குறைச்சல்? அவன் தறியி லிருந்து தினம் ஒரு பீஸ் எகிறுது: புளைக்கிற பையன்! கம்மாவா மளிகை வீட்டுப் பெண்ணைக் கட்டினாக!-'

அவனுக்குக் கலியானமான புதிதில் ஊரெல்லாம் இதுதான் பேச்சு ஊருக்கே ஒரு மளிகை கொஞ்சம் சொத் துள்ள இடத்திலிருந்து பெண் வந்தால் பேச்சில்லாமல் இருக்குமா?

பெரிய இடத்துப் பெண்ணென்று வீட்டு வேலையில் அவள் ஒன்றும் சோடையாயில்லை. அவன் தாய் தாழ்வாரத் தில் உட்கார்ந்து நூலை இழைத்துக்கொண்டே, பானையை யும் சட்டியையும் எடுத்துச் சமையலறையில் நடமாடிக்