பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呂翰發 லா, ச, ராமாமிருதம்

அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் அறைக் கதவு மெதுவாய்த் திறந்து மூடும். கீlச் சீடும்.

அரிதான பளுவுகளைத் தூக்கியும், உடலைக் கசிர்’ வாங்கும் காரியங்களை அனாயாசமாய்ச் செய்யும் அவன் கைகள், அவள் உடலின் மிருதுவைத் தொடக்கூட அஞ்சும். பகவில், வீட்டுக்கும் தொழிலிலும் மன்னனவன் இரவில், இவ்வோலைப் பாயில், மஞ்சளின் மணம் கமழும் அவள் அருகாமையில் தன்னையிழந்து போவது அவனுக்கே ஆச்சரியமாயிருக்கும். அவன் அணைப்பின் வேகத்தில், அவள் கூந்தல் சரிந்து அவன் தோள்மேல் விழும் பலகணி வழி நிலவொளியில், இடையில் நெகிழ்ந்த ஆடையுடன் பற்கள் தெரிய, மெளனச் சிரிப்பு அவள் சிரிக்கையில் அவன் மண்டை கிறுகிறுக்கும். அவன் கைகள் நிறைந்த அவள் ஆவிங்கனத்தில் குளித்துவிட்டு, அவளை அணைத்த கை புடன், மல்லாந்து படுத்து, அவர்களிருவர் மேலும் பரவி யிருக்கும் பாவு நூலைச் சிந்திக்கையில், அது ஒரு குளிர்தரு. நிழல்போல் அவனுக்குப் படும். அவர்கள் ஜீவனமே அதன் குடை கீழ்தான். விழித்தெழுவதும் அதன் கீழே, உழைப் பதும், உண்டு உடுப்பதும் அதனாலே, படுப்பதும், பரம்பரை வளர்வதும் அதன் கீழே. அவனேதான் அவன் தொழில். அவன் தொழிலேதான் அவன்.

அவர்களிருவரும் அதிகமாய்ப் பேசின. ஞாபகம் அவனுக் கில்லை. அவர்கள் தொழிலிலேயே பேச்சுக்கு அதிக இட. மில்லை. பேச்சில் கவனம் போனால், எந்த சமயம் எந்த இழை எப்படி அறுமோ? மத்தியானம், மாமியாரும் மருமகளும் எதிரும் புதிருமாய் உட்கார்ந்துகொண்டு நூல் நூற்பார்கள், மடியில் வைத்திருக்கும் கொட்டாங்கச்சியில் பரிவட்டம் கூத்தாடும். பாவில் குறுக்கே பாயும் கலர் நூலும் வெள்ளை நூலும், நாடாவுக்குத் திட்டமாய்க் கட்டைகளில் ஏற்றியாக வேண்டும். இடையிடையில் வீட்டு அலுவல்கள் காத்திருக்கும். சாப்பாட்டுக்கு நெல் புழுக்