பக்கம்:எப்படி உருப்படும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

17 கெட்டலைந்தவர்களும் இஷ்டம்போல் திரிந்து. - விரும்புகிறவர்களும் அதிகமாக சினிமா உலகில் ஈடுபட்டி ருப்பதால், பொதுவாக சினிமாக்காரர்களைப் பற்றி கெட்ட அபிப்பிராயமே எங்கும் பாவியுள்ளது. . நாடகக்காரர் களா? வெறும் கூத்தாடிப் பசங்க ' என்று அழுத்தமா கப் பதிக்கிருந்த எண்ணம் மாறவேயில்லை. அது சினி மாக்காரன்கள் தானே! என்று எகத்தாளமாக எண்ண இடம் தந்திருக்கிறது. இந்த கலையை மாற்றவே எவ்வ ளவோ திட்டமான வேலைகள் செய்தாகவேண்டும். ஆனால் இதைப்பற்றி எண்ணுவதில்லை சினிமாத் தொழிலில் உள்ளவர்கள். பணமும், டம்பாச்சாரி வாழ்வு, வாழ வசதிகளும் கிடைக்கும் வரை வேறு எதைப்பற்றி அவர்கள் கவலைப்படவேண்டும் ! பணம் சுலபமாகத் திரட்ட வேண்டும்; மி னு க் கி த் திரிந்து சுலபமாகப் பெயரும் புகழும் பெறவேண்டும்; தளுக்குக் காரிகள் (பகட்டுக்காரர்கள்) உறவு வேண்டும் இப்படி ஏதாவது காரணத்தோடு சினிமாத் துறையில் புகுந்துள்ளவர்களே அதிகம்.

  • நல்ல பிஸினஸ் எண்ணி பணம் போட்டு ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்டு, பிறகு கடன் வாங்கி குப்பைப் படம் தயாரிப்பவர்கள்...வெளிச்சம் போட்டு அலைந்து, இளிச்சவாயர்கள் தரும் பணத்தை முதலாக வைத்து, காமா சோமா வென்று எப்படியாவது படம் பிடித்து, பணம் கொடுத்தவன் தலையில் வைத்துக் கட்டுகி றவர்கள்...படத்தை முழுவதும் பிடிக்க முடியாமல் அந்தரத்திலே விட்டு விடுகிறார்கள்...திட்டமற்றவர்கள், திறமை பற்றவர்கள், மேனா மினுக்கிகள், தற்பெருமை டம்பாச்