பக்கம்:எப்படி உருப்படும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

19 முறையில் கலையை வளர்க்க பணமுன்ள வள்ளல்கள்தான் தேவை. - கவிஞர் பாரதிதாசன் பயன்விளைக்கும் விதத்தினிலே பல செல்வர் கூடி இடக்க கற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப் படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும் படமெடுத்தாடும் , தமிழர் பங்கமெலாம் போமே !' 8 இப்போது படமுதலாளிகள் பழியை பொதுமக்கள் பெயரில் போடுகிறா.ர்கள். மக்கள் இவ்விதமான மட்ட ரகமான படங்களையே விரும்புகிறார்கள் எள்று சொல்லி மடத்தனமான, கோளாறான படுபாடாவதி படங்க ளையே நீள நீளமாகப் பிடித்து, படம் பார்ப்பவர்களின் பொறுமையைச் சோதிக்கிறர்கள். பொது மக்களில் பெரும்பாலோர் தந்திர ஜாலங்கள், ஸ்டன்டுகள், அரை முக்கால் நிர்வாண நாட்டியங்கள் மலிந்த படங்களை அதிகம் பார்த்து, படமுதலாளிகளின் பணப்பைகளை நிரப்ப ஓடுகிறா.ர்கள் என்பது ஓரளவு உண்மை. இதற்குப் பொறுப்பு படமுதலாளிகளும் சினிமாக் கலையில் ஈடுபட்டிருப்பவர்களுமே யாவர். சுலபமாக எத்திப் பிழைத்து பணம் பிடுங்க வேணும் என்ற கீழ்தர ஆசையால் மட்ட ரகமான படங்களையே பிடித்துப் பிடித்து மக்களின் ரசனை உணர்ச்சியை மழுங்க அடித்துள்ளனர் சினிமா முதலாளிகள் என்றே கூற