பக்கம்:எப்படி உருப்படும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பத்திரிக்கைகள்,மாதமிரு முறைகள், சுவரொட்டிகள் எங்கும் நம் கண்களை உறுத்துகின்றன. வெளிவந்த படங்கள் பற்றி- வெளிவராத படங்கள் பற்றி -எல்லாம் விளம்பரங்கள்

அவற்றின் மூலம் நாம் அறிவதென்ன? .பழைய படாடோபக் கதைகளே படங்களாக உருவாகின்றன-உருவாக்கப்படுகின்றன. இந்தப் பாடாவதிக் கதைகளை போட்டி போட்டு சுட்டுத் தள்ளுகிறார்கள் பட முதலாளிகள்

திரும்ப திரும்ப வள்ளிகளும் கிருஷ்ண லீலைகளும் வந்த ஸீசன் ஓய்ந்துள்ளது. பார்த்தார்கள் பட முதலாளிகள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் கதை பொட்டலங்கள் தீர்ந்துவிட்டன. ஆகவே 'அடியைப்பிடிடா பாரத பட்டா' என்று 'அரியோன் அரி . அண்ணாவி வீட்டிலே பொரி'என்கிற கதைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இலக்கிய மறுமலர்ச்சி என்கிற பெயரால் சில எழுத்தாளர்கள் பழம் பாடாவதிப் புராணப் புளுகுகளை அடிப்படையாக்கி புது வார்னிஷ் பூசி கலைப்பணி புரிவதுபோல் பட முதலாளிகள் முன்பே சுடப்பட்ட கதைகளை மீண்டும் படம் பிடிக்கத் துணிந்துள்ளார்கள்.. சினிமா மறுமலர்ச்சி சீசனில் பாமா விஜயம், தூக்குத் தூக்கி, காளிதாஸ், அபிமன்யூ, கிருஷ்ண விஜயம், வத்ஸலா கல்யாணம் எல்லாம் முளைக்கின்றன.

வழக்கம்போல் தலைப்பு மாற்று வியாபாரம். ஜரூராகத் தான் நடக்கிறது. காளிதாஸ் ராஜமுக்தி யாகிறது. பாமாவிஜயம் ‘பாரிஜாதம் ’ ஆகப்போகிறது. இப்படிப் பல குல்மால்கள் !