பக்கம்:எப்படி உருப்படும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

5 ஒரு படம் கொஞ்சம் வெற்றிகரமாக ஓடிவிட்டதா? உடனே அதே சுவட்டில் பல காளான்கள் முளைக்கும்.ஒரு பெயருக்கு மௌஸ் ஏற்பட்டுவிட்டதா? அதே சாயலில் ஆயிரம் பெயர் ஒலிக்கும். இந்த மனோபாவம் காரணமாக சினிமா உலகம் வல்லிகளும்--------களும் மண்டிய காடாகி வருகிறது.ஆரவல்லி,சூரவல்லி ,காமவல்லி,வசந்தவல்லி,சண்பகவல்லி

, ஆர்யமாலா ,ரத்னமாலா வகையறாக்கள்!
    இப்படி இரவல் மூளைகளும், ஈயடிச்சான் காப்பிகளும், மாரீசங்களும்தான் சினிமா மார்க்கெட்டிலே போஷிக்கப்படுகின்றன.
எத்திப் பிழைக்க விரும்புகிறவர்கள் எந்தக் குப்பையையாவது அழகான லேபில் ஒட்டி விற்றுவிடத் தவிக்கிறார்கள்.குஜிலிக்கடைப் பதிப்புகள் 

சிலவற்றை பளபளக்கும் ஸெலபோன் பேப்பரில் அடைத்து ஒட்டி

சுலபமாக இளிச்சவாயன் தலையிலே கட்டுவார்களே சில புத்தக வியாபாரிகள், 

அந்த தினுஷிலே தான் சினிமா வியாபாரமும் வளர்கிறது! லாபம் வரும் நஷ்டம் , வருமோ என்று பயந்துங் கொண்டிருக்க விரும்பாமல், நிச்சய வெற்றி பெறச் சுலபமான

வழி கண்டுபிடித்து விட்டார்கள் தமிழ்ப்பட முதலாளி கள். என்ன ? பத்தாம் பசலி அத்தைப் பாட்டிக் கதை கள் அஞ்சாறைச் சேர்த்த முடித்துப்போட்டு, ஸ்டன்டுகள் இந்திர ,தந்திர, மந்திர ஜால வேடிக்கைகள் கூட்டி இஷ்டம் போல் நீளம் நீளமாகப் படம் பிடித்தால் கும்பல் கூடும் என்பது புதிய பாடம் !
மீண்டும் மீண்டும் சிவனார்  வந்து

போகிறார், நாரதரும், தேவலோகச் சாமிகளும் ஆசாமிகளும் தோன்றி மறைந்து அபத்த விளையாட்டுகளைப் புரிகிறார்கள்.