பக்கம்:எப்படி உருப்படும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

6 புராணப் புளுகுகளை கோளாறான கற்பனையோடு புது மெருகு தீட்டிக் கதையாக்கி படம் பிடித்து கச்சா பிலிமை யும், மனித உழைப்பையும், செல்வத்தையும், நாட்டு மக் களின் காலத்தையும் காசையும் கரியாக்குகிறா ர்கள் பண ஆசை பற்றிய வீணர்கள். பலரகமான கீழ்த்தர ஆசை வெறியும் பிடித்தவர்கள் படவுலகில் ஏராளமாக இருப்பதால், தமிழ் சினிமாக்கலை பாழடைந்தே வருகிறது. சாதாரண மக்களின் அறியாமையை மூலதனமாக்கி தாம் பிழைக்க சுலபமான முறையில் வியாபாரம் பண்ணு கிற பீஸினஸ் வாலாக்கள்தான் இன்றையப் படமுதலாளி கள் . கலை வளரவேண்டும், நாட்டுக்கு நல்லன புரியவேண்டும், மக்களின் பண்பாட்டை உயர்த்தவேணும் என்பதெல் லாம். இவர்கள் நோக்கமல்ல. இவர்களுக்கு வேண்டியது பணம்... படாடோப வாழ்க்கை... போக வாழ்வு. செலவு செய்கிற பணத்தை விட அதிகமான லாபம் வருகிறது அதோடு ரக ரகமான உருப்படி களையும் நட்சத்திர ங்களையும் இஷ்டம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற வெறி நினைப்பு, மன அறிப்பு முதலியவைகளால் உந்தப்பட்டு தொழிலில் ஈடுபட்டவர்களே சினிமா உலகில் அதிகம் காணப்படுகிறர்கள்.

குரங்கு கையில் பூமாலை அகப்பட்டதுபோல, இத் தகையவர்களிடம் உயர்ந்த, சிறந்த சக்திவாய்ந்த, கலை சிக்கிக்கொண்டு சீரழிகிறது !

படமுதலாளிகள் விரும்புவது பாடாவதிக் கதை களேயே. அதற்கு அவர்கள் கூறுகிற காரணம் பொது மக்கள் அத்தகைய க தை க ளை யே வரவேற்கிறார்கள்

என்பதே !