பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் வாழ்வும் இலக்கியப் பணியும்

61


இதை வைத்துக் கொள்ளலாமே” என்றேன். “அடே! ஆமாப்பா நான் எடுத்திட்டு வந்ததுதான்” என்று சிரித்துக்கொண்டார். தாமே கொணர்ந்த தலையணையையும் மறந்துவிட்டுக் கையை மடக்கிப் படுத்துக் கொண்டு, கை வலிக்கிறதே என்று கூறும் உள்ளத்தை என்ன உள்ளம் என்று இயம்புவுது? குழந்தையிலும் சின்னஞ்சிறு குழந்தையுள்ளம் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.

கணக்கும் நினைப்பும்

மற்றொரு சமயம் திருச்சி வானொலி நிலையத்தார் கவியரங்க நிகழ்ச் சிக்குப் பாவேந்தரை அழைத்திருந்தனர். ‘இருநூறு ரூபா தந்தால் வருவேன்’ என மறுமொழி எழுதிவிட்டார் கவிஞர். கவியரங்க நிகழ்ச்சிக்கு இருநூறு தருவது நிலைய விதிமுறைகளுக்கு ஒத்துவராது. கவிஞரின் இயல்பும் அவர்களுக்குத் தெரியும். கூடிப் பேசி ஒரு முடிவெடுத்துச் சரி என்று எழுதி விட்டுப் பதிவு செய்து கொள்வதற்காகப் பாரதியாரைப் பற்றிப் பேசவும் வேண்டிக் கொண்டனர். கவிஞர் இசைந்து வந்துவிட்டார். கவியரங்க நிகழ்ச்சி முடிந்து, பேச்சும் பதிவாயிற்று. கவிதைக்கும் பேச்சுக்கும் இருநூறு என்பது வானொலி யார் கணக்கு, கவிதைக்கு மட்டும்தான் இருநூறு பேச்சு இலவசம் என்பது கவிஞரின் நினைப்பு, இப்படி உலக நடைமுறையே அறிந்துகொள்ள இயலாத குழந்தையுள்ளம் கவிஞர் உள்ளம். கள்ளங் கவடறியாத குழந்தை யுள்ளத்தில், சூது வாதறியாத தூய உள்ளத்தில்தானே உண்மைக் கவிதை - உயிர்க் கவிதை தோன்ற முடியும்?

காற்றாடியும் கவிதையும்

கவிதையைப் பற்றி என்னிடம் உரையாடிக்கொண்டிருந்த கவிஞர் இப்பொழுது எவனெவனோ கவிதை எழுதுகிறான். ‘டீல்’ விட ஆசைப்படுகிறான். ஆனால் சின்ன நூல் கண்டை வைத்துக்கொண்டே ‘டீல்’ விட ஆசைப்படுகிறான். நூல் கண்டு பெரிதாக இருத்தல் வேண்டுமே என்று நினைக்க மாட்டேன் என்கிறான்' என்று கூறினார். இளமையில் காற்றாடிக் கலையில் வல்லவராதலின், கவிதை புனைவார்க்கு அந்த உவமை வாயிலாக அறிவுரை கூறியதை எண்ணி வியப்புறுகிறேன். இலக்கியப் படைப்பில் ஈடுபட்டோர்க்கு இது நல்ல அறிவுரையன்றோ?

பிறரிலும் மேம்பட்ட கவிஞனாகி, வெற்றி வாகை சூட வேண்டுமென்னும் போட்டி மனப்பான்மை உடையவன், நிறைந்த நூலறிவு பெறுதல் வேண்டும் என்று முயலாமல் திரிகிறானே என்று கவலைப்படுகிறார். காற்றாடிக்காரன் வெற்றிபெற நூலளவு மிகுதியாதல் வேண்டும், கவிஞன் வெற்றி பெற நூலறிவு மிகுதியாதல் வெண்டும் என்று நயம்பட நவின்றுள்ளார். எதிர்ப்புக்கு அஞ்சாத் துணிவுள்ளம், பிறருக்காகப் போராடும் பேருள்ளம், நெஞ்சிற் பட்டதைப் பட்டென்று சொல்லும் நேர்மையுள்ளம், சூதறியாத குழந்தையுள்ளம், சிந்திக்க