பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இப்படி இவள் புஷ்கினுக்கு மனைவியாகவும், பிற புருஷர்களுக்குக் காதலியாகவும் இருந்து வருவது ரகசியமாக இருந்தாலும் ஜனங்களுக்கு தெரிந்து விட்டது. உடனே தம்பட்டம் தட்டினர். புஷ்கின் புரிந்து கொண்டான். புரிந்து கொண்டு, 'அழகான வாஸ்துக்கள் அநேகமாக எச்சரிக்கையோடு வாழ்வதில்லை. உலகம் அப்படி வாழ விடுவதும் இல்லை' என்று தன் காதுகளுக்கே சொல்லிக் கொண்டான்! இதைப் பற்றி இவளிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. இருந்தாலும் இப்படி செய்து விட்டாளே என்ற வேகம் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

     ஆத்திரம் தாங்க முடியாத இவன் ஆக்திஸை சண்டைக்கு அழைத்தான். 
     மறுநாள் ஜனவரி மாதம் 27-ந் தேதி காலை செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒரு மைதானத்தில் இருவரும் சந்தித்தனர். ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்ளலாம் என்று, அதிகாரி, முன் அறிவிப்பு கொடுப்பதற்குள், வெடுக்கென்று ஆந்திஸ் தன் கை துப்பாக்கியால் புஷ்கினை சுட்டு விட்டான். புஷ்கின் குறைந்த உயிரோடு குதிரை வண்டியில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டான். இதைக் கேள்விப்பட்டு கொதிக்கும் கண்ணீரோடு நண்பர்கள் ஓடி வந்தனர். புரட்சிக்காரர்களும் மாறவேஷத்தோடு பிரேதமாகப் போகும் புஷ்கினை சுற்றிக் கொண்டார்கள். மனைவியும் அழுதபடி வந்தாள். அவள் வருவதை சிநேகிதர்கள் சொன்னார்கள். 'தடுத்து விடுங்கள் ; அவள் என்னைப் பார்க்க வேண்டாம். அதற்குப் பதிலாக என் குழந்தைகளைக் கொண்டு வாருங்கள். அந்த அரும்பு உதடுகளை முத்தமிட்டு என் இறுதி மூச்சை முடித்துக் கொள்கிறேன் என்று தடுமாறித் தடுமாறிச் சொன்னான்.
    பிறகு குழந்தைகள் இருக்கும் இடத்துக்கு அவனே நகர்ந்து சென்று குழந்தைகளே !

8 எப்போதும் இருப்பவர்கள்