பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீங்கள் இருக்கப் போகிறவர்கள். நான் இதோ இறக்கப் போகிறவன். தாய் செய்த பாபத்தை நீங்களும் செய்து விடாதீர்கள்' என்று ஆசீர்வதித்தான். அப்போது ஒரு சிநேகிதன் 'என்ன இருந்தாலும் உங்களைப் போன்ற உலக அறிஞனுக்கு இப்படிப்பட்ட சாவு வந்திருக்கக் கூடாது' என்றான். அதற்கு புஷ்கின் 'சாவு எந்த விதமாகவும் வரலாம்; ஆனால் அதன் காரணம் மட்டும் கெளரவம் உள்ளதாக இருக்க வேண்டும்!'என்று தன் கடைசி வார்த்தைகளாகச் சொன்னான். அவன் தலை சாய்ந்தது.

     10-2-1837 பகல் 2.45 மணிக்கு புஷ்கின் இறந்தான்.
  இவன் சாவுக்காக அரசனும், பிரபுக்களும் சந்தோஷப்பட்டாலும், ரஷ்ய ஜனங்கள் தம்  இதயத்தாலும், இரண்டுகண்களாலும் அழுதனர்! இவன் சிஷ்யன் லெர்மான்டோவ் என்பவன் ஒரு 'பிரேதக் கவியை’ சொல்லிக்கொண்டே எழுதினான். இருந்தவர்கள் கேட்டுக் கொண்டே அழுதார்கள்.

புஷ்கின் சவத்தை அரசாங்கம் பகல் நேரத்தில் புதைக்க விடவில்லை. கல்லறைக்குத் திரண்டு வரும் கூட்டத்தையும் தடுத்தது. இவன் சவப் பெட்டிமீது ரோஜாப் பூவின் ஒரு இதழ்கூட உதிரவில்லை. இவனுக்காக ஆலய மணியின் நாக்கும் அசையவில்லை !

இருட்டு நேரத்தில் விளக்கு வெளிச்சம்கூட இல்லாமல் சில ஏழை விவசாயிகள்,செத்துப்போன புஷ்கினை முதுகு நோக சுமந்து வந்து ஒரு சாதாரண இடத்தில் புதைத்தார்கள்......

       புஷ்கின் எழுகிய புஸ்தகங்களில் எண்ணத்துக்காகவே வார்த்தைகள் இருக்கின்றன. தேவைக்கு மீறி.வளருகின்ற நகத்தை வெட்டுவதுபோல


சுரதா 9