பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் இலக்கியத்தில் எதையும் வெட்டிவிட முடியாது. நான் ஏற்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவசியத்துக்காக வளரும் பல்லைப் போன்றது' என்று அவனே சொல்லிக்கொள்கிறான்.

    நாஸ்திகத்தை நிச்சயப்படுத்துவதற்காக புஷ்கின் பல புத்தகங்கள் எழுதினான். தன் புத்தகங்களுக்கு இவன் யாரிடமும் முகவுரைக் கேட்பதில்லை. முகவுரை வாங்குவதே ஒரு பலஹினம் என்று நினைத்தான்.
     இவன் தன் 'கோட்டு எப்படி இருக்கிறது? சட்டை எப்படி இருக்கிறது? என் அழகு எப்படி இருக்கிறது?' என்று மற்றவர்களைக் கேட்டிருக்கிறனே தவிர, 'என் எழுத்து எப்படி இருக்கிறது?' என்று தன் சொந்த நண்பனைக்கூட கேட்டதில்லை! ஏனென்றால் தனக்கு எதிரேயே தன் நண்பன் முட்டாளாவதை

இவன் விரும்பவில்லை !

10 எப்போதும் இருப்பவர்கள்