பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதிய முதல் நாடகம் இதுதான். இதை எழுதி ஆறு மாதம் ஆவதற்குள் * உன் வட்டாரத்தில் வைத்துக் கொள் : என்ற இன்னொரு நாடகத்தையும் எழுதினான். இந்த இரண்டையும் ஜனங்கள் ஒப்புக் கொண்டனர் ; அவனை உச்சியில் வைத்தும் புகழ்ந்தனர்.

ரஷ்யாவின் இலக்கிய கவுர வத்தை முழு உலகத்துக்கும் இழுத்துக் கொண்டு போகக் கூடியவன் இவஸ்கி ஒருவன்தான் ” என்று இவன் காலத் தில் புகழ் பெற்று விளங்கிய ஷெவிரேவ் என்ற விமர்சகன் இவனைப் பற்றி சொல்லியிருக்கிறான். அந்த நேரத்தில் அதி மேதாவி என்று மாஸ்கோ ஜனங்களால் உச்சரிக்கப் பட்டு வந்த கிரிபோயிடவ், கோகல், ஒன்விசின் போன்ற வர்களும், நாங்கள் புத்திசாலிகள்தான் ; இருந்தாலும் இவஸ்கி மகா மேதாவி ; இதை நாங்களே கூச்சப்படாமல் சொல்லி விடுகிறோம் ' என்று இவனைப் பற்றி சொல்லி யிருக்கிறார்கள்.- - -

- இவன் 1852-லே கல்யாணப் பெண் என்ற நாடகத்தை எழுதினான். மறு வருஷத் தில், அதிக வருமானம் கொண்ட வேலை என்ற இன்னொரு நாடகத்தையும் எழுதினான். இதை சர்க்கார் தடுத்தது ; தண்டனையும் தந்தது. இந்த சமயத்தில்தான் இவன் எழுதும் ஞாபகமே இல்லாமல் இருந்தான்.

- - பிறகு, 1859-லிருந்து புதிய இரண்டு சிநேகிதரை விட, பழைய ஒரு சிநேகிதனேமேல்* சிநேகிதரிடம் தாராளமாய் பழகுதல் - கறுப்பு நாட்கள்’ - பெருங் காற்று - காட்டு, நிலம் ஆகிய நாடகங்களை எழுதி வந்தான் ; நீண்ட வருஷங்களுக்குப் பிறகுதான் முடிக்க முடிந்தது. .

இவஸ்கி, இப்படி நீர்வீழ்ச்சி

போல தொடர்ச்சியாக எழுதி, நாடகம் போட்டு காண்

2 . . . . எப்போதும் இருப்பவர்கள்