பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க ன் பூ சிய Gi)

அடிக்கடி அழுதவன் அள வுக்கு மீறிய உயரம், அதுவும் ஒன்பதரையடி இருக் தவன் ; ராணி கான்சியா'வை முத்தமிட்டு இருக் கலாம் என்று, சிஷ்யர்களால் சந்தேகிக்கப்பட்டவன் ; ஆயுள் காலம் முழுவதும் ஞானியாகவும், அதிலே, சில வருஷங்கள் சர்வாதிகாரியாகவும் இருந்து, பார்த்தவன்- கன்பூசியஸ்.’ -

- முதல் மனைவிக்கு ஒன்பது பெண்கள் பிறந்தும், ஆண் குழந்தை இல்லையே என்ற குறையைப் போக்கிக் கொள்ள, அறுபத்து நான்கு வய தான ஹோ என்ற ஏழை சைனாக்காரன், இரண்டாவ தாக சென்ஷை என்ற பதினாறு வயதுள்ள பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அவனுக்கும் சென் ஷைக்கும் பிறந்தவன்தான் கன்பூசியஸ்.

கன்பூசியஸ் பிறந்து 9

வருஷம் ஒன்பது நாள் முடிந்தது. அவன் தந்தை இறந்து ஒரு பகல், ஒரு இரவு ஆனது. கைக் குழந்தை கன்பூசியஸ் அப்போது அழுதான். தகப்பன் சாவுக்காக

அல்ல, தாயின் பாலுக்காக !

- - விதவையான சென்ஷை தன் பிள்ளையைக் காப்பாற்ற பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. கோழி குரல் கொடுக்கும் நேரத்தில் எழுந்து, பறவைகள் கூட்டுக்குள் நுழைந்து கொள்ளும் நேரம் வரையிலும், சின்ன கன்பூசியஸ் செம்மறி ஆடுகளை மேய்ப்பான். சென்ஷை களத்து மேட்டில் நெல்லை அளந்து போடுவாள். இப்படி துன்ப வாழ்க்கை நடத்தி வந்தாலும், சென்ஷை

சுரதா 15