பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனும் பிரசன்னமாகும்போது, பொது ஜனங்களைப் பார்த்து நீங்கள் ஒழுக்கத்திலிருந்து தடுமாறி விடாதீர் - கள். தடுமாறினால் ஒரு கோப்பை விஷம், என் கைகளால் தரப்படும். உங்கள் இருதயத்தில் விரோத உணர்ச்சிகள் இருந்தால், அதை இப்போதே எடுத்து விடுங்கள். இல்லா விட்டால் இந்த கன்பூசியஸ், வெட்டச் சொல்லுவதற்கும், சித்ரவதையைப் பார்த்துச் சிரிப்பதற்கும் தயங்கமாட்டான் என்று எச்சரிக்கை செய்வான்.

                   ஒரு தடவை அவன் சொன்ன படியே சில ஏழைகளை மூன்று துண்டுகளாக வெட்டச் சொன்னான். இன்னொரு சமயம் ஒரு மந்திரியின் கண்களை, நெருப்பில் சிவந்த இரும்புக் கம்பிகளால் குத்தவும் சொல்லி யிருக்கிறான். இதையெல்லாம் பார்த்தும் அரசன் எதுவும் கேட்பதில்லை. அவன் விஷயத்தில் மன்னன் வாய் மூடிக் கிடந்தது ! - *
                ஜ ன ங் க ள் கன்பூசியஷை வேரோடு வெறுத்தார்கள். அவனை விரட்ட வெளிநாட்டு வேந்தர்களும் தந்திரம் செய்தார்கள். கண்டாலே காமப் பைத்தியம் பிடித்துக் கொள்ளும்; அப்படிப்பட்ட அழ கான பெண்கள் எண்பது பேரை, 'லேக்' குதிரைகளில் ஏற்றி, கையில் ரோஜாப் பூவைக் கொடுத்து, அந்த 'லூ' தேசத்து வேந்தனே வட்டமிட்டு உட்கார்ந்து கொள்ளுங் கள் என்று 'சீ' தேசத்து வேந்தன் அனுப்பினான். வந் தார்கள் . எண்பது அழகிகளையும், உள்ளே வராதபடி கன் பூசியஸ் தடுத்தான். அந்தப் பெண் புஷ்பங்கள், கோட்டைக் கதவுகளுக்கு வெளியே உட்கார்ந்து விட்டனர். இதை ஊர் பார்த்தது ; ஆச்சரியப்பட்டது பிரபுக்கள் பார்த் தனர்; ஆசைப்பட்டனர். அரசன் கேள்விப்பட்டான் ; கன்பூசியஸ் தெரிந்து கொள்ள முடியாதபடி, சாதாரண உடையணிந்து, அந்த அழகிகளின் மடியில் நித்திரை செய்ய ஆரம்பித்தான் ! 

சுரதா 17