பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னிடம் கற்றுக் கொண்டவர்களே ! என்னிடம் கேட்டுக் கொள்ள வந்திருப்பவர்களே ! இந்தக் கிழவன் இதுவரை சொன்னது போதும். அதற்கு மரியாதை கொடுங்கள். எனக்காக காத்துக் கொண்டிருக்கும் சவப் பெட்டியே ! இரு எனக்குப் பிடித்தமான திராட்சை இலைகளுக்கு ஒரு தடவை முத்தம் தந்துவிட்டு வந்து விடுகிறேன் ? என்றான். பிணமானான் ! -

- - இந்த உலகத்தில் கன்பூசியஸ் எழுபத்து மூன்று வருஷங்கள்தான் இருக்க முடிந்தது. அவன் சவப் பெட்டியை 'ஜீ' நதிக் கரையில் புதைத்து, அதைச் சுற்றி, குடிசைகள் கட்டிக் கொண்டு மூவாயிரம் சிஷ்யர்கள் ஆயிரம் நாட்கள் ஓ யா ம ல் அழுதார்கள். ஒருவன் மட்டும் ஆறு வருஷங்கள் அழுதுகொண்டே இருந்தானாம் ! -

சாதா - 19.