பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வில்லியம் ஒயில்டு

இந்த உலகத்திலே, அதிக ஞாபக சக்தி உள்ள மெக்காலே இருந்தானே, அவனுக் குச் சரியான சரித்திர ஆதாரங்களைத் தந்து உதவிய, இந்த வில்லியம் ஒயில்டுதான், ஒரு இரண்டாவது ஷேக் ஸ் பி ய ைர, அதாவது, ஆஸ்கார் ஒயில்டை பெற்றவன். * .

- இவன், வைத்தியத்தில், வரும் பெண்களை வசப்படுத்தி முத்தமிடுவதில், புஸ்தகங்கள் எழுதுவதில், ப த் தி ரி கை நடத்துவதில்-மிகவும் கெட்டிக்காரன். ஜேன், இவன் மனைவி. இவளுக்கு கவி எழுதத் தெரியும். அதனால், இவனுக்கும் கவி எழுதும் பழக்கம் வந்தது. . -

ஒயில்டு, விவாதிக்கும்போது அறிஞன், கோபப்படும்போது முட்டாள். பெண்களைப் பார்த்துவிட்டால் மன்மதன். இவன், இருக்கும் மனிதர் களுக்கு போதிக்கிறான். ஆனால், அவர்களோடு பழகக் தெரியவில்லை.” என்று இப்படி இவனைப் பற்றி அயர்லாந்து மனிதர்கள் அடிக்கடி பேசிக் கொள்வது உண்டு.

- தாசி, அடிக்கடி தன்னை அலங் கரித்துக் கொள்வதுபோல, இந்த ஜேனும், இந்த வில்லிய மும் தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். புருஷன் மனை வியான இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதே அவள் தாயானள். அவன் தகப்பனானான். பிறகு, ஜேன் ஒருபெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தாள். பைபிள் வார்த்தைகளால் மட்டு மல்ல, ஒரு கவிதை எழுதி, அந்த வார்த்தைகளால்கூட தேவனைத் தொழுது வந்தாள். இவள் பிரார்த் தனை யை தேவன் பலிக்க வைப்பதற்கு முன்பே, இவள் ஆசையை

20 எப்போதும் இருப்பவர்கள்