பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- அவளுக்குப் பணம் கொடுப்ப தற்காக, வில்லியம் அடிக்கடி பெட்டியைத் திறப்பான். மேரி, அதை வைப்பதற்காகப் பெட்டியைத் திறப்பாள்.

இந்த விபசாரி, . சொ ந் த மனைவி ஜேனை விலக்கி விடும்படி, வில்லியத்துக்கு யோசனை சொன்னாள். அதற்கு அவன் ஊமையாக இருந்தான்.

எத்தனையோ பெண்களை ருசி பார்த்த அவனுக்கு, இப்போது மேரியின் உதடுகளும் கசக்க ஆரம்பித்து விட்டன. அவள் ஸ்நேகத்தை அறுத் துக் கொள்ள விரும்பினான். இதைத் தெரிந்துகொண்ட மேரி, பாத்தியதை கொண்டாட ஆரம்பித்து விட்டாள்.

அவள் வாயாடித் தனத்துக்கு வில்லியம் பயந்தான். பணம் கொடுத்தான். இவன் பலஹீனத்தைத் தெரிந்து கொண்ட மேரி, அடிக்கடி பணம் கேட்டு வந்தாள். மீண்டும் மீண்டும் கொடுத்தான். இன் னும் வேண்டும் வேண்டும் என்று நச்சரித்தாள். -

' கண்டிப்பாகத் தரமுடியாது. உன் உதடுகளை, இனி யாருக்காவது விற்றுக்கொள். அங்கே கேள். இங்கே வந்தால்... ......நான் டாக்டர்.

என்னிடம் விஷம் இருக்கிறது.”...... என்றான்.

- * உன் செல்வாக்கால், என்னை எதுவும் செய்ய முடியும். இருந்தாலும், நான் ஏமாந்தவ ளல்ல. தேள் கொட்டாமல் தன் கொடுக்கை முறித்துக் கொள்ளாது, இரு பார்த்துக் கொள்கிறேன்? என்று சொல் லிப் போய் விட்டாள். அன்று இரவு மறைந்து, மறு. நாள் சந்திரன் தெரிந்தது. மேரி, ஒரு வாலிபனை தன் அறைக்கு அழைத்துக்கொண்டு வந்து, முதலில் மதுவை யும், பிறகு முத்தத்தையும் கொடுத்து, வில்லியத்தை அவமானப்படுத்தும் கேவலக் கவிதைகளை, எழுதச் 22

எப்போதும் இருப்பவர்கள்